Sunday, 18 December 2011

பேஸ்புக்கில் உங்கள் அந்தரங்கத் தகவல்களைப் பாதுகாக்க இன்னும் 6 நாட்கள் மட்டுமே

இவ்வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டதும், சர்ச்சையைக் கிளப்பியதும், இதுவரை பேஸ்புக்கினால் மேற்கொள்ளப்பட்டதுமான 'டைம்லைன்' வசதி நேற்று முதல் அதன் அனைத்து பாவனையாளர்களுக்கும் வழங்கப்பட்டது.
இதனை https://www.facebook.com/about/timeline என்ற முகவரியில் சென்று பெற்றுக்கொள்ள முடியும். கீழே படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு ' Get Timeline ' பட்டனை அழுத்துவதன் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும்.
பாவனையாளர்கள் விரும்புகின்றார்களோ, இல்லையோ 'டைம்லைனு'க்கேற்ப உங்களது புரொஃபைல் மாற்றமடைந்தே தீரும்.
பேஸ்புக்கில் உங்களது அனைத்து நடவடிக்கைகளும் காலத்தின் அடிப்படையில் காட்சிப்படுத்தப்படும்.
தற்போது 'டைம்லைனை' பெற்றுக்கொள்ளும் போது உங்களுக்கு 7 நாட்கள் (Grace Period​) அவகாசம் கிடைக்கின்றது. அதாவது டிசம்பர் 22 ஆம் திகதி வரை. இக்காலப்பகுதியில் உங்கள் புரொஃபைல் டைம்லைனிற்கேற்ப மாற்றமடைந்த போதிலும் மற்றைய பாவனையாளர்கள் இதனைப் பார்வையிட முடியாது.
காரணம் கீழே படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு Publish Now என்ற பட்டனை அழுத்தினால் மட்டுமே மற்றவர்கள் அதனைப் பார்வையிட முடியும். எனினும் இது 22 ஆம் திகதி வரை மட்டுமே.
எனவே பாவனையாளர்கள் தங்களது டைம்லைன் புரொஃபைலில் உங்களுக்குத் தேவையானவற்றை விட்டுவிட்டு மற்றவைகளை அழித்து விடவோ அல்லது டைம்லைனில் இருந்து மறைத்து வைக்கவோ முடியும். இதற்குப் பின்னரே ' Publish Now' வினைக் கொடுக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.
இது இம்மாதம் 22 ஆம் திகதி வரை மட்டுமே. அதற்குப் பின்னர் உங்கள் டைம்லைன் புரொஃபைலினை அனைவரும் பார்வையிடக் கூடியதாக இருக்கும். எனவே இத்திகதிக்கு முன் அனைவரும் தங்களது அந்தரங்கத் தகவல்கள் வெளியே கசிய விடாமல் பாதுகாப்பதே இலகுவழியாகும்.

அமெரிக்கா இதுவரை கண்டிராத அதிர்ச்சியை ஈரான் கொடுத்துள்ளது !

அமெரிக்காவின் அதி நவீன ஆளில்லா உளவுபார்க்கும் விமானம் ஒன்றை கடந்த வாரம் தாம் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்தது. ராடர் திரையில் விழாமல் தன்னை உருமறைத்துக்கொண்டு பறக்கத்தக்க இந்த விமானம் தான் இருக்கும் இடத்தை வேறு இடத்தில் இருப்பது போன்ற பொய்யான ...
தோற்றப்பாட்டையும் மேற்கொள்ள வல்லது. அதுமட்டுமல்லாது அதி நவீன கண்காணிப்புப் கருவிகளைக் கொண்டுள்ள இவ்விமானம் தரையில் இருந்துவரும் ஆபத்துக்களையும் அறிந்து அதற்கு ஏற்றால் போல தனது பறக்கும் திறனை மாற்றவல்லது.
இதனை எவ்வாறு சுட்டு வீழ்த்த முடியும் என்பதே பெரும் கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் அதனை ஈரானிய இராணுவத்தினர் பத்திரமாகத் தரையிறக்கியுள்ளனர் என்ற செய்தி தற்போது கசிந்துள்ளது. இவ்விடையம் ஏற்கனவே அமெரிக்காவுக்குத் தெரிந்திருக்கவேண்டும் ஆனால் அவர்கள் வாயே திறக்கவில்லை.
காரணம் ஈரான் தான் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அறிவிக்க அப்படியே இருக்கட்டும் என அமெரிக்க விட்டுவிட்டது. விமானம் சுடப்பட்டால் அது தரையில் வந்து விழும்போது சிறிய அளவிலாவது சேதம் ஏற்படும்.
ஆனால் சுட்டு வீழ்த்தியதாகச் சொல்லப்படும் விமானத்தை ஈரான் காட்டும்போது அதனைப் பார்த்து உலகமே ஒரு கணம் ஆடிப்போய்விட்டது. காரணம் அதில் எந்தச் சேதமும் இல்லை.
(மிகமிகக் குறைந்த ஒரு சேதத்தைத் தவிர) அப்படி என்றால் விமானத்தை எவ்வாறு ஈரான் இராணுவத்தினர் கைப்பற்றினார்கள் என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்தது. ஆனால் அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது. மேற்கொண்டு படியுங்கள் இந்த விடயத்தை
சம்பவ தினமன்று குறிப்பிட்ட விமானம்(RQ - 170) அப்கானிஸ்தான் வான் பரப்பில் பறப்பது போன்ற தோற்றப்பட்டை கொடுத்துக்கொண்டு பறப்பில் ஈடுபட்டுள்ளது.
அமெரிக்கா சொல்கிறது அவ்விமானம் சிலவேளை ஈரானின் எல்லைப் பகுதிக்குள் தற்செயலாகச் சென்றிருக்கலாம் என்று. ஆனால் அந்த விமானம் ஈரான் நாட்டிற்குள் சுமார் 200 கிலோ மீட்டர் வரை ஊடுருவிச் சென்று வேவுபார்த்துள்ளது என்பதே உண்மையாகும்.
குறிப்பிட்ட விமனம் உள்வாங்கும் GPS சமிஞ்சைகளை ஈரான் அவதானித்து அதனை வைத்து அந்த ஆளில்லா விமானத்தை ஏமாற்றியுள்ளது. புரியவில்லையா ? அதாவது இந்த அதி நவீன ஆளில்லா விமானம் செயற்கைக்கோளில் இருந்து வெளியாகும் சில சமிஞ்சைகளை வைத்தே தனது (பாதை) பயணத்தை உறுதிசெய்கிறது.
அச் சமிஞ்சைகள் சிலவேளை கிடைக்கவில்லை என்றால் அது தானாகவே ஆட்டோ பைலட்(தானாகப் பறக்கும் திறனுக்கு) மாறும். ஈரான் முதலில் ஒருவகையன ஒலிக்கற்றைகளைப் பாவித்து செயற்கைக்கோளின் சமிஞ்சைகளைத் தடைசெய்துள்ளது.
அவ்விமானம் உடனே ஆட்டோ பைலட் சிஸ்டத்துக்கு தன்னை மாற்றி பறப்பில் ஈடுபட ஆரம்பித்துள்ளது. இவ்வாறு பறப்பில் இருந்த விமானத்தின் கருவிகளோடு உடனடித் தொடர்பை ஏற்படுத்திய ஈரான் இராணுவத்தினர் விமானத்தில் ஏற்கனவே பதியப்பட்டிருந்த வரைபடங்களை மாற்றியுள்ளனர்.
உலகவரை படங்கள் சிலவற்றை மாற்றி அதனை அந்த விமானத்தின் மெமரியில் பதித்துள்ளனர். புதிதாகப் பதிக்கப்பட்ட மெமரியில் அந்த விமானம் இறங்கவேண்டிய இராணுவத் தளம் ஈரானின் ஒரு விமான நிலையம் எனக் குறிக்கப்பட்டுள்ளது.
அந்த விமானத்தைப் பொறுத்தவரை ஈரான் நாடு தான்.. தான் தரையிறங்கவேண்டிய கடைசி விமானநிலையம் என அது நினைத்துள்ளது. (அதாவது பாக்கிஸ்தான் இல்லையேல் அக்பானிஸ்தான் என்று அது நினைத்து ஈரானில் தரையிறங்கத் தயரானது).
இந்த விமானத்தை அதுவரை கட்டுப்பாட்டில் வைத்திருந்த சி.ஐ.ஏ உளவு நிறுவனம் அதன் கட்டுப்பாட்டை சில நிமிடங்கள் இழந்தது.
அதனைச் சாதகமாகப் பயன்படுத்திய ஈரான் அந்த ஆளில்லா விமானம் இறங்கவேண்டிய குறியீடுகளை தாம் ஏற்கனவே ஏற்படுத்தியிருந்த தொடர்புகள் மூலம் உட்செலுத்தியுள்ளது. பறக்கும் அவ்விமானத்தின் உயரத்தை அவசரமாக கணக்கிட்ட அவர்கள் எத்தனை ஆயிரம் அடி உயரத்தில் இருந்து அது தரையிறங்கவேண்டும் என அறிவித்தல் சமிஞ்சைகளை விடுக்க அவ்விமானம் தனது சொந்த விமானநிலையத்துக்கு தாம் வந்துவிட்டதாகக் கருதி தரையிறங்கியுள்ளது.
இருப்பினும் எல்லாவற்றையும் படு கச்சிதமாகச் செய்த ஈரானின் இராணுவ வல்லுனர்கள் சிறிய பிழை ஒன்றைமட்டும் விட்டுவிட்டனர். விமானத்திற்க்கும் ஓடு தளத்திற்கும் இடையே உள்ள தூரத்தை துல்லியமாக அவர்கள் கணக்கிடவில்லை.
அதனால் அமெரிக்க விமானம் தரையிறங்கும்போது மெதுவாக இறங்கவில்லை. சற்றுக் கடினமான முறையில் தரையிறங்கி மிகச்சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளது அவ்வளவுதான்.
ஆனால் இது ஈரானின் பாரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. உலகில் உள்ள பல நாடுகளுக்கு மேல் இவ்விமானம் பறப்பில் ஈடுபட்டு நோட்டம் இட்டுள்ளது. இவ்விமானம் ரஷ்ய வான்பரப்பில் கூட பறந்து அங்கும் மண்ணைத்தூவி திரும்பியுள்ள நிலையில் இதனை ஈரான் எவ்வாறு துல்லியமாகக் கண்டு பிடித்து சுட்டு வீழ்த்தாமல் தரையிறக்கியுள்ளது என்பது பெரும் சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.
இதனை விடப் பெரியவிடையம் என்னவென்றால் இவ்விமானம் பறப்பில் ஈடுபட்டு ஈரான் நாட்டிற்குள் வந்த சில நிமிடங்களில் எல்லாம் ஈரான் இராணுவ வல்லுனர்கள் கடுகதி வேகத்தில் எவ்வாறு செயல்பட்டார்கள் என்பது தான் தெரியவில்லையாம். இவ்விமானம் குறித்து ஏற்கனவே ஈரான் பல தகவல்களைத் தெரிந்துவைத்திருக்கிறதா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளது.
அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவு நிறுவனம் தற்போது ஆழ்ந்த யோசனையில் உள்ளது. இதற்கான பதிலடியை ஈரானுக்கு எவ்வாறு கொடுப்பது என்பது அமெரிக்காவின் அடுத்த சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க கைப்பற்றப்பட்ட விமானத்தில் இருந்து அமெரிக்காவில் உள்ள தேசிய பாதுகாப்பு கம்பியூட்டர்களை அல்லது உளவு நிறுவனத்தின் கம்பியூட்டர்களைத் தொடர்புகொள்ள முடியும் என்பதனால் அனைத்துச் சேனல்களையும் அமெரிக்க பென்ரகன் பாதுகாப்பு மையம் தற்போது முடக்கியுள்ளதாம்.

Tuesday, 13 December 2011

Smart Friend List: பேஸ்புக்கின் புத்தம் புதிய வசதி

உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் ஒரு செய்தியையோ அல்லது நிகழ்ச்சியையோ அல்லது அனுபவத்தையோ மற்ற நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிகவும் பயனளிப்பது சமூக தளங்கள்.

சமூக தளங்களில் நாம் பகிரும் தகவல்கள் நண்பர்கள் அனைவருக்கும் அப்டேட்ஸ் செய்தி செல்கிறது. அதன் மூலம் நண்பர்கள் நம் தகவலை பார்க்க முடிகிறது.
ஆனால் சமூக தளங்களில் நம் நண்பர்கள் மட்டுமின்றி உறவினர்கள், தோழிகள் இப்படி பல தரப்பட்ட நண்பர்கள் இருப்பார்கள். இதில் குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு மட்டும் செய்தியை அனுப்ப பேஸ்புக்கில் மிகுந்த சிரமம் எடுத்து அனுப்ப வேண்டும்.
ஆனால் கூகுள் பிளசிலோ இது மிகவும் சுலபம் தேவையானவருக்குக்கு ஒருவருக்கு மட்டும் கூட செய்தியை அனுப்பலாம். இதனை கருத்தில் கொண்டு பேஸ்புக் தளமும் இப்பொழுது புதிய வகை friend List வசதியை அறிமுகபடுத்தியுள்ளது.
இதற்கு முதலில் இந்த லிங்கில் கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு ஒரு விண்டோ திறக்கும் அதில் உங்கள் நண்பர்கள் பட்டியல் இருக்கும்.
இதில் ஒவ்வொரு நண்பருக்கு நேராகவும் Friends என்ற பட்டன் இருக்கும் அதில் கர்சரை வைத்தால் உங்களுக்கு சிறிய விண்டோ ஓபன் ஆகும் அதில் அந்த நண்பர் எந்த வகை சேர்ந்தவர் என்பதை தேர்வு செய்யவும்.
நீங்கள் நினைக்கும் பிரிவு அந்த லிஸ்டில் இல்லை என்றால் New List என்பதை அழுத்தி புதிய பிரிவை உருவாக்கி தேர்வு செய்து கொள்ளவும்.
நீங்கள் ஒவ்வொரு நண்பர்களையும் தேர்வு செய்தால் அந்த நண்பர்க்கு நேராக உள்ள பட்டனில் கர்சரை வைத்தால் அவர் உள்ள பிரிவை பார்க்கலாம்.
இது போல அனைவரையும் வெவ்வேறு பிரிவில் தேர்வு செய்து கொள்ளுங்கள். அடுத்து உங்கள் wall பகுதிக்கு செல்லுங்கள். அங்கு நீங்கள் பகிர வேண்டிய தகவல் கொடுத்த பின்னர் Post பட்டனுக்கு அருகில் ஒரு பட்டன் Public or Friends என இருக்கும் அதில் கிளிக் செய்யவும்.
அதில் தகவல் பகிர வேண்டிய குறிப்பிட்ட ஒரு பிரிவை தேர்வு செய்து விட்டு Post பட்டனை அழுத்தினால் குறிப்பிட்ட நபருக்கு மட்டும் அந்த அப்டேட்ஸ் செல்லும் மற்ற நண்பர்களுக்கு செல்லாது.
குறிப்பிட்ட ஒரு விஷயம் நீங்கள் பகிரும் தகவல்கள் எப்பொழுதும் குறிப்பிட்ட நபருக்கு செல்ல கூடாது என நீங்கள் நினைத்தால் அந்த நபரை Restricted பிரிவில் சேர்த்து விடுங்கள்.
இனி நீங்கள் குறிப்பிட்ட நபர்களுக்கு உங்கள் அப்டேட்ஸ் அனுப்பி மகிழலாம். இந்த வசதி முழுக்க முழுக்க கூகிள் பிளசில் இருந்து கொப்பி அடிக்கபட்டாலும் பல பேருக்கு நிச்சயம் பயனளிக்கும்.

VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள்

கணணி உபயோகிக்கும் அனைவருக்கும் VLC மீடியா பிளேயரை பற்றை அறிந்திருப்போம். கணணியில் வீடியோ, ஓடியோ கோப்புகளை இயக்க உதவும் இலவச மென்பொருள்.

இந்த மென்பொருளில் ஏராளமான வசதிகள் உள்ளது மற்றும் இந்த மென்பொருள் வெறும் பிளேயராக மற்றும் இல்லாமல் சில மற்ற வசதிகளையும் கொண்டுள்ளது.
ஆனால் பெருமாலானவர்கள் அந்த வசதிகள் இருப்பது கூட தெரியாமல் அதற்கென தனித்தனி மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருக்கின்றனர். அதன் படி VLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள மூன்று ரகசிய வசதிகளை இங்கு காணலாம்.
1. Add Watermarks: குறிப்பிட்ட ஒரு வீடியோவுக்கு நம்முடைய பெயரையோ அல்லது நம் பிளாக்கின் பெயரையோ வாட்டர் மார்க்காக கொண்டுவர நாம் வேறு சில மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருப்போம். ஆனால் இந்த வசதி VLC மீடியா பிலேயரிலே இருக்கிறது.
அதற்கு VLC மென்பொருளை ஓபன் செய்து Tools - Effects and Filters - Video Effects - Vout/Overlay - சென்று வீடியோவுக்கு வாட்டர் மார்க் எபெக்ட் போட்டு கொள்ளலாம்.
2. Video Converter: நம்முடைய வீடியோ கோப்புகளை மாற்றம் செய்ய ஏராளமான இலவச மென்பொருட்களும், கட்டண மென்பொருள்களும் இருக்கின்றன். அதில் நமக்கு பிடித்த மென்பொருளை பயன்படுத்தி நாம் வீடியோவை மாற்றம் செய்கிறோம்.
ஆனால் VLC Media Player ல் இந்த  மாற்றம் செய்யும் வசதியும் உள்ளது. அதை உபயோகிக்க Media - Open File - Select Video மாற்றம் செய்ய வேண்டிய வீடியோவை தேர்வு செய்து கொண்டு பின்னர் Ctrl+R கொடுக்கவும்.
அடுத்த விண்டோவில் ADD பட்டனை கிளிக் செய்து மறுபடியும் வீடியோவை தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள Convert பட்டனை அழுத்தவும்.
அடுத்து Destination file என்பதில் Browse கிளிக் செய்து உங்கள் கோப்பு சேமிக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்து கொள்ளவும். அடுத்து வரும் விண்டோவில் பட்டனில் கிளிக் செய்து உங்கள் வீடியோ போர்மட் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
போர்மட் தேர்வு செய்தவுடன் Start பட்டனை அழுத்தினால் உங்கள் வீடியோ மாற்றம் செய்யப்பட்டு விடும்.
3. Free Online Radio: VLC மீடியா ப்ளேயரில் ஓன்லைனில் உள்ள ரேடியோக்களை எந்த வித கட்டணமுமின்றி இலவசமாக கேட்டு ரசிக்கலாம். இந்த வசதியை கொண்டு வர VLC யை ஓபன் செய்து Ctrl + L கொடுக்கவும்.
உங்களுக்கு இன்னொறு விண்டோ ஓபன் ஆகும். அதில் உள்ள Internet என்பதை கிளிக் செய்து ரேடியோ சேனல்கள் ஓபன் ஆகும். அதில் பாடல்களை கேட்டு ரசிக்கலாம்.

நம்முடைய ஐடி தெரியாமல் மற்றவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவதற்கு

இணையத்தில் இலவச மின்னஞ்சல் சேவை வழங்கும் நிறுவனம் பல உள்ளன. ஜிமெயில், யாகூ, ஹொட்மெயில் போன்ற நிறுவனங்கள் பிரபலமானவைகள்.
இந்த தளங்களில் நாம் உறுப்பினர் ஆகி நமக்கென ஒரு முகவரியை உருவாக்கி கொண்டு அதன் மூலம் நம் நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்புகிறோம்.
ஆனால் நம்முடைய மின்னஞ்சல் முகவரியை மறைத்து மற்றவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். இதன் மூலம் நண்பர்களுக்கு உங்களின் முகவரியை மறைத்து அனுப்பி கிண்டல் பண்ணலாம் மற்றும் ஒரு சில அலுவலகங்களில் முக்கிய மின்னஞ்சல் தளங்களை முடக்கி வைத்திருக்கலாம் அது போன்ற சமயங்களிலும் இந்த முறை உங்களுக்கு உதவி புரியும்.
Anonymous Mail அனுப்ப இந்த தளத்தில் செல்லுங்கள். உங்களுக்கு அந்த தளம் ஓபன் ஆனதும் ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் To என்ற இடத்தில் அனுப்ப வேண்டிய முகவரியை கொடுக்கவும்.
Message என்ற பகுதியில் நீங்கள் அனுப்ப வேண்டிய செய்தியை கொடுத்து பிறகு கீழே உள்ள Send Anonymously என்ற பட்டனை அழுத்துங்கள். அவ்வளவு தான் உங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுக்காமல் மற்றவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி விடலாம்.

Friday, 9 December 2011

ஃபேஸ்புக் பாவனையாளர்களின் IP Address ஐ கண்டுபிடிப்பது எப்படி?

இன்று பேஸ்புக் கணக்கு வைத்திருக்காதவர்களே இருக்கமுடியாது. அந்தளவுக்கு பேஸ்புக் பிரபல்யம் பெற்றுள்ளது. எந்தளவுக்கு பிரபல்யமாகியுள்ளதோ அந்தளவுக்கு திருட்டு வேலைகளும் அதிகரித்துள்ளது. பேஸ்புக் கணக்கு திருடப்படுவது குறித்து பேஸ்புக் பாவனையாளர்களே! எச்சரிக்கை எனும் தலைப்பில் கடந்த பதிவில் விரிவாக எழுதியிருந்தேன்

இன்று பார்க்கப்போவது திருட்டு கணக்கு வைத்திருப்பவர்கள் பற்றி.



பேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் பலரும் விரும்புவது அதிக நண்பர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதையே. எம் துறை சார்ந்தவர்களையும் , எமது ரசனையுள்ளவர்களையும் நாம் அதிகம் நண்பர்களாக்கிக் கொள்வோம். இவ்வாறான நண்பர்களில் பெரும்பாலானவர்களை எமக்கு தெரிந்திருக்காது. யார் யார் உண்மையானவர்கள்? யார் போலியானவர்கள்? என்று எமக்கு தெரிவதில்லை. இவர்களில் பலர் வீண் வேலைகளில் ஈடுபடுவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.

அதிலும் பல ஆண்கள் பெண்களுடைய பெயரில் கணக்கை வைத்திருந்து தகாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தவிர பல வேண்டத்தகாத நபர்கள் போலிப்பெயர்களுடன் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு எமக்கு சிரமத்தை கொடுப்பார்கள். 

இவ்வாறானவர்களை எவ்வாறு அடையாளம் காண்பது?

மிகவும் இலகுவானது.......
ஆனால் குறித்த நபர் உங்கள் நண்பர் பட்டியலில் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் அவருடன் சிறிது நேரம் அரட்டை அடியுங்கள். அதற்கு முன்னர், பேஸ்புக்கை தவிர ஏனைய அனைத்து தளங்களையும் மூடிவிடுங்கள்( வேறு தளங்கள் திறந்து இருந்தால் மட்டும்). முடிந்தால் குக்கீஸ் மற்றும் உலாவியின் History போன்றவற்றையும் அழித்துவிடுங்கள். 

குறித்த நபருடன் அரட்டையில் ஈடுபட்டவாறே ‘Command Prompt‘ ஐ திறவுங்கள். (Start >Run>cmd)
அதன் பின்னர் Command Promp இல் netstat -an என்ற கட்டளையை கொடுத்து எண்டர் பண்ணுங்கள். அவ்வளவுதான். இப்போது உங்களுடன் தொடர்பில் உள்ளவரின்  IP Address காட்டப்படும். பின்னர் அதை  IP Address Trace பண்ணும் இணையங்களில் கொடுத்து அந்த நபர் பற்றிய விபரங்களை பெற்றிடுங்கள்.

IP Address Trace தளம்