Showing posts with label உணர்வுகள். Show all posts
Showing posts with label உணர்வுகள். Show all posts

Saturday, 28 January 2012

தமிழ் புத்தகங்களை இணையத்தில் வாசிப்பதற்கு

ரீட் எனி புக், லிட்பை உட்பட இணையத்திலேயே புத்தகங்களை வாசிக்க பல இணையத்தளங்கள் உள்ளன.
ஓபன் ரீடிங் புக் என்னும் அந்த இணையத்தளம் தமிழில் புத்தகங்களை இபுக் வடிவில் இலவசமாக படிக்க உதவுகிறது.
முகப்பு பக்கத்தில் வலைப்பதிவு வடிவில் வரிசையாக புத்தகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. எந்த புத்தகம் தேவையோ அதனை கிளிக் செய்து படிக்கத் தொடங்கி விடலாம்.
அருகிலேயே மற்ற புத்தகங்கள் அவைகளின் வகைகளுக்கு ஏற்ப தொகுக்கப்பட்டுள்ளன. அரசியல், இலக்கியம், உடல் நலம், இசை என வகைகளின் பட்டியல் நீள்கிற‌து.  
நாட்டுப்புற இலக்கியம், நாவல்கள், பயண இலக்கியம் என பல வகையான புத்தகங்களும் இருக்கின்ற‌ன.
சமீபத்தில்  தொடக்கப்பட்டு இந்த தளம் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இதில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

சமூக தளங்களிலிரு​ந்து தரவுகளை Backup செய்வதற்கு

இன்றை காலகட்டத்தில் பல்வேறு சமூக தளங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அவற்றினூடாக மிக அவசியமான தரவு, தகவல்களும் பரிமாற்றப்பட்டு வருகின்றன.
எனினும் அவற்றினூடு பரிமாற்றப்படும் தகவல்களுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதாவது குறித்த தகவல்களை சில சந்தர்ப்பங்களில் இழக்க நேரிடலாம். 
எனவே இவ்வகையான இழப்புக்களை தவிர்ப்பதற்கு அத்தகவல்களை Backup செய்துகொள்வதற்கு எல்லோரும் விரும்புவார்கள். அவர்களுக்காகவே ஓன்லைனில் இச்சேவையை வழங்க ஒரு இணையத்தளம் உள்ளது.
Backupify என்ற குறித்த இணையத்தளத்தின் மூலம் இலவசமாகவும், கட்டணம் செலுத்தியும் இச்சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.
இலவச சேவை எனின் 1GB அளவும் கட்டணம் செலுத்தப்பட்ட(premium accounts) சேவை எனின் 10-50GB இடவசதியை பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் இங்கு பத்திற்கு மேற்பட்ட சமூக தளங்களிலிருந்து தரவு, தகவல்களை Backup செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
செயன்முறை:
1. தளத்திற்கு சென்று புதிய கணக்கொன்றை(signup) ஆரம்பிக்கவும்.
undefined
2. கணக்கை ஆரம்பித்ததும் கீழுள்ளவாறு தோன்றும் அமைப்பில் Backup செய்ய வேண்டிய சமூக தளத்தை தெரிவு செய்து add என்பதை அழுத்தவும்.
3. அப்பொழுது குறித்த சமூகத்தளத்தில் login செய்யுமாறு கேட்கும். ஆகவே login செய்து தோன்றும் சாளரத்தில் Install என்பதை அழுத்தவும்.
4. அதன் பின் உங்களின் அனுமதியை கேட்கும் எனவே Allow என்பதை தெரிவு செய்யவும்.
5. இப்பொழுது வாரம் ஒருமுறை தகவல்கள் அனைத்தும் தானாகவே Backup செய்யப்படும்.
6. Backup செய்யப்படும் தரவுகளை மின்னஞ்சல் முகவரியை கொடுத்து நேரடியாக மின்னஞ்சலிலிருந்து தரவிறக்கம் செய்யலாம். அதற்கு கீழே படத்தில் காட்டியவாறு configure என்பதை அழுத்தவும்.
குறிப்பு: premium accounts பயனர்கள் ஆரம்பத்தில் கட்டணம் செலுத்தாது 30 நாட்கள்வரை இலவசமாக பயன்படுத்த முடியும். முப்பது நாட்டகளின் முடிவில் இச்சேவை உங்களுக்கு பிடித்திருந்தால் கட்டணம் செலுத்தி புதுப்பித்துக்கொள்ள முடியும்.

Tuesday, 3 January 2012

புகைப்படங்களை வீடியோவாக மாற்றம் செய்வதற்கு...

திருமணம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு எடுக்கப்படும் புகைப்படங்களை வீடியோவாக மாற்றம் செய்து கொள்வதற்கு ஒரு மென்பொருள் உதவி புரிகிறது.
இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும்.
பின் இதனை ஓபன் செய்ததும் தோன்றும் விண்டோவில் இதில் உள்ள Add Photo மூலம் புகைப்படங்களை தெரிவு செய்யவும்.
பின்னர் இரண்டாவதாக உள்ள Theme -ல் தேவையான  வடிவத்தை தெரிவு செய்யவும். பின்னர் உங்களுக்கு தேவையான பாடலை நிகழ்ச்சிக்கு ஏற்ப சேர்க்கவும்.
தேவையான தலைப்பை சேர்த்துகொள்ளவும். உங்களுக்கு வீடியோ எந்த போர்மட்டுக்கு வேண்டுமோ அதனை தெரிவு செய்து கொள்ளவும். சேமிக்கும் இடத்தையும் தெரிவு செய்து கொள்ளவும். இப்போது சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் உங்களுக்கான வீடியோ கிடைக்கும்


யாழிலிருந்து தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா

னுஷின் கொலைவெறி பாடலை யாழ்ப்பாணத்து கலைஞன் இப்படி பாடுகிறான். தமிழ் மொழி மீதான அரசியல் பற்று உள்ளவர்களே தமிழ் மொழியறியா நிதிகளே. திருத்திய பாடலாக இந்தப் பாடல் வெளிவந்திருக்கிறது
இதைக் கேட்டாவது உங்கள் மொழியறிவு வளரட்டும். எமது ஈழக் கலைஞர்களின் இந்த படைப்பினை பார்க்கும் போது நெஞ்சு நனைகிறது. இவர்களுக்கு வாழ்த்துக்கள்.
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..?
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா...
கல் தோன்றி மண் தோன்ற முன்வந்த தமிழ்மொழிடா...
நீ தமிழன் என்றால் கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா..





யாழிலிருந்து தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா

Wednesday, 2 November 2011

மாற்றத்தை விரும்பும் இந்த மானிட உலகில் ..

எதுவுமே நிரந்திரமற்ற 
இந்த மானிட வாழ்வில் , 
நாம் விரும்புவர் மட்டும் 
எப்படி நிரந்திரமாவர் ?? 
நம்மை விரும்புவர் மத்தியில் 
நம் பேர் நிலைக்கும் 
என நாம் கனவு ஒன்று 
கண்டாலும் அது எப்படி நிறைவேறும் ?? 
மாற்றத்தை விரும்பும் இந்த 
மானிட உலகில் ..

Monday, 31 October 2011

தமிழன் என்ற பெருமை எமக்கும் உண்டு

வீரம் வீரம் என்று சொல்லி என்ன செய்தோம்… கடைசியாக எல்லோரும் செத்தது தானே மிச்சம் ---->

வீரத்துக்கும் துரோகத்துக்கும் வித்தியாசம் இருக்கு… ஒரு நாட்டோடு ஒன்பது நாடுகள் மோதுவது வீரமல்ல, துரோகம் !

இன்னும் என்ன தோழா?
நம்மை இங்கே நாமே தொலைத்தோமே??
நம்ப முடியாதா?நம்மால் முடியாதா?
நாளை வெல்லும் நாளாய் செய்வோமே..
யாரும் இல்லை தடைபோட.. 
வந்தால் அலையாய் வருவோம்..
வீழ்ந்தால் விதையாய் வீழ்வோம்
!http://www.facebook.com/photo.php?v=265806833454431

Friday, 5 August 2011

வாழ்க்கை என்னும் கடலிலே ..

கடல் போன்ற வாழ்க்கையிலே...... 
கரை தேடும் அலைகளை போல்.....
எம் வாழ்வு நித்தமும் கொந்தளிப்பாய்....!!

Tuesday, 2 August 2011

மனமே! ஏன் மாறினாய்!

மனமே! மனமே! ஏன் மாறினாய்!  என்னை கேட்காமல் 
இதுவரை நான் உன்னை வெல்வேன். என எண்ணியிருந்தேன். 
நீ என்னை வெல்வாய் என ஒருபோதும்  எண்ணியதில்லை.
 என்னுள் இருந்து என்னை வென்று விட்டாய் நீ.
 இனி உன்னை தோற்கடிக்க முடியுமா ? என்னால் 
  நான் செய்யவேண்டியது  என்ன  சொல் மனமே ! !!!!!

Thursday, 28 July 2011

நீ வெல்ல வேண்டி ............

ஏதோதோ எழுதுகிறேன்.......... 
என்னை ஓர் பைத்தியமாக்கி...
ஏதேதோ உளறுகிறேன்......... 
நீ ஏமாந்து போககூடாது .......

என்பதற்காய் என்னை 

 நான் ஒவ்வொரு முறையும் 

 தோற்கடிகிறேன் உன்னுள் ........ 
நீ வெல்ல வேண்டி ...........
.


Tuesday, 26 July 2011

வாடகை வீடுகள்

மனித மனங்களும் வாடகை வீடுகள் தான் 
யாரையும் நிரந்தரமாக தங்க விடுவதில்லை 

மௌனமும் ஒருநாள்


மௌனமும் ஒருநாள்

மனதில் நினைப்பதையே  சொல்ல வேண்டும்
இல்லையெனில் மௌனமாய் இருப்பதே சிறந்தது 
 அந்த மௌனமும் ஒருநாள் நினைக்கும் 
மௌனத்தை கலைப்பதே  மேல் என்று 
அப்படி கலையும் போது மனசு
 இளகி விடுகிறது சில நொடிகளில்........ 

Friday, 22 July 2011

தொலைந்த தூக்கம்

ஊரெல்லாம் தூங்குது 
உன்னாலே தூக்கமில்லை 
கண்ணே எனக்கு 
கண்மூடி பார்த்தேன் 
காயம் தான் மனதில் . 
ஏனென்று தெரியவில்லை

FACE BOOK










FACE BOOK என்பது நல்ல விசயமோ கெட்ட விசயமோ 
அவரவர் கையாளும் விதத்திலுள்ளது BUT 
என்னை பொறுத்தவரை FACE BOOKஎன்பது 
கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கும் 
ஜனநாயக ஊடகம் என்றே சொல்லலாம் BECAUSE 
கருத்துகளை துணிந்து வெளியிடமுடியும்.

சிறகொடித்த குருவி

சிறகொடித்த குருவி 

சுதந்திரமாய் பறந்து திரிந்த குருவியை பார்த்து 
பட்சி ஒன்று சொன்னது இனிமேல் 
உன்னால் பறக்கமுடியாது என்று 
அதுதான் விதி என நம்பிய குருவி 
தன் சிறகுகளை வெட்டிக்கொண்டு 
கூண்டுக்குள்ளே சிறைபட்டு கொண்டது தன்னாலே ................

உனக்காக....................

உனக்கு மட்டும் ஒளி கொடுக்க வந்தேன் 
நான் இருட்டில் இருப்பதை அறியாதவனாய் 
என் நிலை நான் உணர்ந்த பின்னர் 
என்னால் நீ உருக்குலைந்து போகுமுன் 
நான் இன்றுஉன்னையே விட்டு செல்கிறேன் 
உடலில் உயிர் உள்ளவரைஉன்னை நான் மறவேன் 
உனக்காக வேண்டி என் உள்ளமதில் 
நிதம் தொழுவேன் என்றும் ..........................

ஆலகால விஷம்

ஆருடம் ஆளையே அணுஅணுவாய் கொல்லும் 
ஆலகால விஷம் என்றால் மறுபதற்கில்லை