Saturday, 10 March 2012

அற்புதமாய் அதிசயமாய் தாயவள் சந்நிதியில் இடம் பெற்ற புனித சம்பவம்.... முழுமையான தகவல்... எமக்கு கிடைத்தவரை....

இன்றைய தினம் நயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற அற்புத நிகழ்வு.....


நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நாகமாணிக்கக் கல் கக்கிய அதிசயம்.
மட்டக் களப்பில் இருந்து வருகைதந்து,நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் பாம்பு நடனம் போட்ட குறிப்பிடப்பட்ட இந்த நபர்,தனது வாயில் இருந்து நாக மாணிக்கக் கல்லை கக்கி ஆலய நிர்வாகத் தலை வரிடம் கொடுக்கப் பட்டது.இவ் அதிசய நிகழ்வு இன்று 10 .03 .2012 காலை நிகழப் பட்டது 


அம்பாள் ஆலயத்திற்கு மட்டக்களப்பில் இருந்து அம்பாளைத்தரிசிக்க வந்த அடியவர் ஒருவருக்கு ஏற்ப்பட்ட அருள் கலையில் நாகம் போன்று அசைந்தாடி நாகரத்தின கல்லினை தனது வாயினால் இரத்தத்துடன் கக்கி எடுத்து அதனை ஆலய நிர்வாக தலைவரிடம் வழங்கி இவ் நாகரத்தின கல்லினை 9 ஆண்டுகளுக்கு பின்னர் எடுக்கும் படி கூறியுள்ளார். 
 
மட்டக்களப்பில் இருந்து வந்த மூர்த்தி  தர்சன் என்ற அடியாரே இந்த அற்புதத்தை நிகழ்த்தினார் . 

அத்துடன் அவ் நாகரத்தின கல்லினை 9 வருடங்களின் பின்னர் பார்க்கின்ற போது அதன் முழு சக்தியும் அதில் புலப்படும் எனவும் இதனால் பார்ப்பவர்கள் பார்வை இழக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

இவ் புனித நாகரத்தினத்தை பேப்பர் உறையினால் சுற்றி தற்போது ஆலய நகைப் பெட்டியினுள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் இவர் தனது அருள் கலையில் அம்பிகையின் ஆலயத்தோற்றம் போன்று ஆலயத்தின் நிலத்தின் அடியினில் இருப்பதாகவும் ஆலயத்தில் தற்போது உள்ளகல்வெட்டு போன்ற கல்வெட்டும் நிலத்தின் அடியினுள் இருப்பதாகவும் அக் கல்வெட்டை 9 வருடங்களின் பின்னர் எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 




இவ் அதிசய நிகழ்வு இன்று 10 .03 .2012 காலை இடம் பெற்றது. 

மேற்படி தகவல்கள் வேறு இருந்தால் பிரசுரிக்கப்படும்.....

நன்றி..

நயினை நாகபூஷணி அம்மன் பாதம் பணிந்து....
நயினைத் தினசரிச் செய்தி.
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி......
 


Sunday, 29 January 2012

Facebook-ல் பகிரப்படும் படங்களுக்கு வண்ண வண்ண "எபெக்ட்" கொடுக்க

எமது வாழ்வின் உன்னதமான தருணங்களை நண்பர்களுடன் பகிர்வதற்கு பிரபல சமூகத்தளமாக Facebook-ஐ பயன்படுத்துகின்றோம்.
இதன் மூலம் புகைப்படங்களையும் பகிர முடியும் என்பது அறிந்த விடயம். அதேபோல் அப்புகைப்படங்களுக்கு விதம் விதமான Effect வழங்கிய பின் நண்பர்களுடன் பகிர முடியும்.
இதற்காக பல இணையத்தளங்கள் உள்ளன. ஆனால் அது சற்று சிரமமான விடயமாகும். காரணம் பகிர வேண்டிய புகைப்படத்ததை குறித்த தளங்களுக்கு Upload செய்து பின் Effect வழங்கியதை தொடர்நது Download செய்து மீண்டும் பேஸ்புக் தளத்தில் Upload செய்ய வேண்டும்.
இச்சிரமத்தை தவிர்த்து நேரடியாகவே பேஸ்புக்கில் Upload செய்யப்பட்டுள்ள புகைப்படங்களுக்கு Effect கொடுக்கும் வசதியை Mess My Photo என்ற இணையத்தளம் வழங்குகின்றது.
எவ்வாறு Effect கொடுப்பது என்று பார்ப்போம்.
1. இந்த இணைப்பில் அழுத்தி Mess My Photo தளத்திற்கு செல்லவும்.
2. தளத்திலுள்ள FB Select என்பதை அழுத்தவும்.
3. நீங்கள் முதல் தடவை இவ்வசதியை பயன்படுத்துவதனால் அனுமதி கேட்கும் எனவே Install என்பதை அழுத்தி, தொடர்ந்து Allow என்பதை அழுத்தவும்.
4. அடுத்தாக உங்கள் பேஸ்புக்கில் உள்ள எல்லா புகைப்படங்களும் காண்பிக்கும் ஒரு Window தோன்றும். அதில் நீங்கள் Effect கொடுக்க விரும்பும் படத்தை தேர்ந்தெடுக்கவும்.
5. தொடர்ந்து நீங்கள் விரும்பும் Effect ஒன்றை தேர்வு செய்து Apply என்பதை அழுத்தவும்.
6. இப்பொழுது படத்தை பேஸ்புக்கில் Save செய்வதற்காக FB Save என்பதை அழுத்தவும்.
தற்போது இந்த புதிய படமானது உங்களது பேஸ்புக் கணக்கில் சேமிக்கப்பட்டிருக்கும். இனி அந்த படத்தை உங்கள் நண்பர்களுடன் பரிமாறலாம்.

Saturday, 28 January 2012

தமிழ் புத்தகங்களை இணையத்தில் வாசிப்பதற்கு

ரீட் எனி புக், லிட்பை உட்பட இணையத்திலேயே புத்தகங்களை வாசிக்க பல இணையத்தளங்கள் உள்ளன.
ஓபன் ரீடிங் புக் என்னும் அந்த இணையத்தளம் தமிழில் புத்தகங்களை இபுக் வடிவில் இலவசமாக படிக்க உதவுகிறது.
முகப்பு பக்கத்தில் வலைப்பதிவு வடிவில் வரிசையாக புத்தகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. எந்த புத்தகம் தேவையோ அதனை கிளிக் செய்து படிக்கத் தொடங்கி விடலாம்.
அருகிலேயே மற்ற புத்தகங்கள் அவைகளின் வகைகளுக்கு ஏற்ப தொகுக்கப்பட்டுள்ளன. அரசியல், இலக்கியம், உடல் நலம், இசை என வகைகளின் பட்டியல் நீள்கிற‌து.  
நாட்டுப்புற இலக்கியம், நாவல்கள், பயண இலக்கியம் என பல வகையான புத்தகங்களும் இருக்கின்ற‌ன.
சமீபத்தில்  தொடக்கப்பட்டு இந்த தளம் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இதில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

ஓன்லைனில் பயோடேட்டாவை உருவாக்குவதற்கு

என்ன தான் பெரிய படிப்பு படித்தாலும் தமக்கென்று ஒரு பயோடேட்டா(Bio-data) உருவாக்க வேண்டும் என்றால் பலபேரின் பயோடேட்டாக்களை பார்த்து அதில் எது சிறந்ததாக இருக்கிறதோ அதன்படி தான் பலபேர் பயோடேட்டா உருவாக்குகின்றனர்.
ஆனால் மேலதிகாரிகளை ஈர்க்கும்படி நமக்கு பயோடேட்டாவை 10 நிமிடத்தில் ஒரு தளம் உருவாக்கி கொடுக்கிறது.
பலமணி நேரம் செலவு செய்தாலும் சரியாக பயோடேட்டா அமைய மாட்டேன் என்கிறதே என்று சொல்லும் நம்மவர்கள் கூட இனி தன் திறமையை எங்கு எந்த இடத்தில் காட்டினால் மேலதிகாரிகளை கவரலாம் என்று சொல்லி நமக்கு பயோடேட்டா உருவாக்கி கொடுக்கிறது ஒரு தளம்.
இத்தளத்திற்கு சென்று முகப்பில் இருக்கும் Get Started என்ற பொத்தானை சொடுக்கி நாம் பயோடேட்டா உருவாக்க ஆரம்பிக்கலாம். நம் பெயர், முகவரி, கல்வித்தகுதி, இதரதகுதிகள் என ஒவ்வொன்றாக கேட்டு வேலை செய்ய விரும்பும் துறைகள் வரை அனைத்தையும் கேட்ட பின் நம் பயோடேட்டாவை எப்படி கொடுத்தால் சிறப்பாக இருக்குமோ அப்படி கொடுக்கிறது.
பல்வேறு வகையான பயோடேட்டாவின் மாடல்கள் இங்கு இருக்கிறது இதில் எது வேண்டுமோ அதை நாம் ஒரே சொடுக்கில் தேர்ந்த்தெடுத்துக் கொள்ள்லாம்.
மேலதிகாரிகளின் பார்வையில் படும்படி வைக்க வேண்டும் என்று அழகாக வகைப்படுத்தி கண்ணால் பார்பதற்கு அழகாகவும் சிறப்பாகவும் பயோடேட்டா உருவாக்கி கொடுக்கிறது.
எந்தவிதமான கட்டணமும் இல்லை எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இணையம் வழியாக அனைவரும் பார்க்கும் வண்ணமும் தேவைப்படும் போது பிரிண்ட் செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.

சமூக தளங்களிலிரு​ந்து தரவுகளை Backup செய்வதற்கு

இன்றை காலகட்டத்தில் பல்வேறு சமூக தளங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அவற்றினூடாக மிக அவசியமான தரவு, தகவல்களும் பரிமாற்றப்பட்டு வருகின்றன.
எனினும் அவற்றினூடு பரிமாற்றப்படும் தகவல்களுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதாவது குறித்த தகவல்களை சில சந்தர்ப்பங்களில் இழக்க நேரிடலாம். 
எனவே இவ்வகையான இழப்புக்களை தவிர்ப்பதற்கு அத்தகவல்களை Backup செய்துகொள்வதற்கு எல்லோரும் விரும்புவார்கள். அவர்களுக்காகவே ஓன்லைனில் இச்சேவையை வழங்க ஒரு இணையத்தளம் உள்ளது.
Backupify என்ற குறித்த இணையத்தளத்தின் மூலம் இலவசமாகவும், கட்டணம் செலுத்தியும் இச்சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.
இலவச சேவை எனின் 1GB அளவும் கட்டணம் செலுத்தப்பட்ட(premium accounts) சேவை எனின் 10-50GB இடவசதியை பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் இங்கு பத்திற்கு மேற்பட்ட சமூக தளங்களிலிருந்து தரவு, தகவல்களை Backup செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
செயன்முறை:
1. தளத்திற்கு சென்று புதிய கணக்கொன்றை(signup) ஆரம்பிக்கவும்.
undefined
2. கணக்கை ஆரம்பித்ததும் கீழுள்ளவாறு தோன்றும் அமைப்பில் Backup செய்ய வேண்டிய சமூக தளத்தை தெரிவு செய்து add என்பதை அழுத்தவும்.
3. அப்பொழுது குறித்த சமூகத்தளத்தில் login செய்யுமாறு கேட்கும். ஆகவே login செய்து தோன்றும் சாளரத்தில் Install என்பதை அழுத்தவும்.
4. அதன் பின் உங்களின் அனுமதியை கேட்கும் எனவே Allow என்பதை தெரிவு செய்யவும்.
5. இப்பொழுது வாரம் ஒருமுறை தகவல்கள் அனைத்தும் தானாகவே Backup செய்யப்படும்.
6. Backup செய்யப்படும் தரவுகளை மின்னஞ்சல் முகவரியை கொடுத்து நேரடியாக மின்னஞ்சலிலிருந்து தரவிறக்கம் செய்யலாம். அதற்கு கீழே படத்தில் காட்டியவாறு configure என்பதை அழுத்தவும்.
குறிப்பு: premium accounts பயனர்கள் ஆரம்பத்தில் கட்டணம் செலுத்தாது 30 நாட்கள்வரை இலவசமாக பயன்படுத்த முடியும். முப்பது நாட்டகளின் முடிவில் இச்சேவை உங்களுக்கு பிடித்திருந்தால் கட்டணம் செலுத்தி புதுப்பித்துக்கொள்ள முடியும்.

2011ம் ஆண்டு சாதனை படைத்த தொழில்நுட்பங்கள்

சென்ற 2011ஆம் ஆண்டில் பல நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய புதிய தொழில்நுட்பங்களும், சாதனங்களும் தோல்வியைத் தழுவின.
ஆனால் சில நிறுவனங்கள் கொண்டு வந்த தொழில் நுட்பத்திற்கு சிறந்த வகையில் வெற்றியும், மக்களிடையே அந்த சாதனங்களுக்கு வரவேற்பும் இருந்தன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
1. ஆப்பிள் நிறுவனத்தின் சிரி(Siri): ஆப்பிள் நிறுவனம் வழங்கிய ஐபோன் 4S மக்கள் எதிர்பார்த்த பல மாற்றங்களுடன் வரவேற்பைப் பெற்றது.
வேகமாக இயங்கும் ப்ராசசர், சிறந்த அம்சங்களுடன் கூடிய கமெரா ஆகியவை இருந்தன. ஆனால் ஒரு பெரிய மாற்றத்தைத் தந்து கொண்டிருக்கும் சிரி என்னும் தொழில்நுட்பத்தினை ஆப்பிள் இந்த போனில் கொடுத்தது.
நம் ஒலி வழி தரும்(Voice Command) கட்டளைகளைப் புரிந்து கொண்டு செயல்படுத்துவதுடன் பதில் அளிக்கவும் செய்கிறது. ஆண்ட்ராய்ட் மற்றும் விண்டோ போன்களில் இந்த வகை வசதி இருந்தாலும், ஒலி வழி தருவதில் அவை பல வரையறைகளைக் கொண்டுள்ளன.
ஆனால் ஐபோன் இயற்கையான மொழி வழியை எளிதில் உணர்ந்து கொண்டு செயல்படுகிறது. ஆர்ட்டிபிசியல் இன்டலி ஜென்ஸ்(Artificial Intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் திறன் இப்போது நம் பாக்கெட்டில் ஐபோன் 4S உடன் கிடைக்கிறது.
வரும் ஆண்டில் இது இன்னும் பல சாதனங்களில் கிடைக்கும். தொழில் நுட்பமும் மேம்பாடு அடையும். கணணகளில் இதனைப் பயன்படுத்துகையில் பேசியே கட்டளைகளைத் தர முடியும்.
2. சாம்சங் கேலக்ஸி போன்கள்: ஸ்மார்ட் போன்களைத் தருவதில் ஆப்பிள் நிறுவனம் மட்டுமின்றி, சாம்சங் நிறுவனமும் சில சாதனைகளை ஏற்படுத்தியது.
மிகக் குறைவான தடிமனில் ஆண்ட்ராட்ய்ட் சிஸ்டத்துடன் வடிவமைக்கப்பட்டு இவை வெளிவந்து சாதனையை ஏற்படுத்தின. இது வரும் ஆண்டிலும் தொடரும். மேலும் பல மேம்பாடுகளை அடையும்.
3. ஆப்பிள் ஐ-பேட் 2: தடிமன் குறைவாக, மிகக் குறைவான எடையில் ஐ-பேட் 2 சாதனத்தைக் கொண்டு வந்து தன்னுடைய போட்டியாளர்களைக் கதி கலங்க வைத்தது ஆப்பிள் நிறுவனம். ஏனென்றால் மற்ற நிறுவனங்கள் அப்போது தான் தங்களுடைய டேப்ளட் பிசியை எப்படி வடிவமக்கலாம் என்பது குறித்து சிந்தித்து வந்தன.
அந்த போட்டி நிறுவனங்கள் விழித்துக் கொண்டு தங்களுடைய டேப்ளட் பிசிக்களைக் கொண்டு வந்த போது ஆப்பிள் டேப்ளட் பிசி என்றால் ஐ-பேட் 2 தான் என ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தது. அக்டோபர் 2011ல் இவற்றின் விற்பனை 4 கோடியை எட்டியது உலக சாதனை. இந்த ஆண்டிலும் இது தொடரும்.
4. விண்டோஸ் போன்: மைக்ரோசாப்ட் வழங்கிய விண்டோஸ் போன், ஆப்பிள் ஐ-போன் மற்றும் ஆண்ட்ராய்ட் எதிர்த்து இடம் பெறுமா என்பது ஐயம் என்றாலும், விண்டோஸ் போன் அறிமுகம், இவற்றிற்கு எதிராக, சரியான காய் நகர்த்தல் என்றே அனைவரும் கருதுகின்றனர்.
2010ல் முழுமை அடையாத ஒரு விண்டோஸ் போன் மென்பொருள் தொகுப்பினை, மைக்ரோசாப்ட் வெளியிட்டாலும் அடுத்த ஆண்டில் முழுமையான போன் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக விண்டோஸ் போன் சிஸ்டத்தைக் கொண்டு வந்தது.
Copy and Paste வசதி, ஒரே நேரத்தில் பல செயல்பாடுகளை இயக்கும் திறன், எச்.டி.எம்.எல். 5க்கான சப்போர்ட், முன்பக்க கமெரா சப்போர்ட் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாக விளங்குகின்றன.
நோக்கியா நிறுவனத்துடன் விண்டோஸ் போன் சிஸ்டத்துடன் போன்களைக் கொண்டு வர மைக்ரோசாப்ட் மேற்கொண்ட ஒப்பந்தம் இதனை இன்னும் வேகமாக மக்களிடையே கொண்டு வரும் முயற்சியானது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு மொபைல் உலகில் ஒரு திருப்புமுனையை விண்டோஸ் போன் ஏற்படுத்தியது. வரும் ஆண்டில் இது ஓர் ஆதிக்க நிலையை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
5. கூகுள் ப்ளஸ்: ஒருவழியாக 2011ல் பிரச்னை இல்லாத சமுதாய தளம் ஒன்றை கூகுள், கூகுள் ப்ளஸ் என்ற பெயரில் ஏற்படுத்தியது.
சிறிது நாட்களிலேயே இதற்கு 4 கோடி வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைத்தது. இந்த வகையில் முன்னணியில் இயங்கும் தளமான பேஸ்புக் தளத்திற்கு இணையான, போட்டியான செயலாக இது அறியப்பட்டது.
ஆர்குட் போன்ற தளங்கள் தர முடியாத போட்டியை கூகுள் ப்ளஸ், பேஸ்புக் தளத்திற்கு தந்தது. வரும் ஆண்டில் இவை இரண்டு மட்டுமே இந்த வகையில் போட்டியில் இருக்கும் நிலை ஏற்படும்.
6. கூகுள் குரோம்: மெல்ல மெல்ல தன் நிலையை உறுதி செய்து இன்று, பயர்பொக்ஸ் பிரவுசருக்குப் போட்டியாக அதன் இடத்தைப் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது கூகுள் குரோம் பிரவுசர்.
நவம்பர் மாதம் பிரவுசர் போட்டியில் பயர்பொக்ஸைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது உண்மை. வரும் ஆண்டில், தன் பங்கினை மேலும் உயர்த்த பல புதிய பரிமாணங்களுடன் குரோம் பிரவுசர் வரலாம்.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்கு நிச்சயமாய், குரோம் பிரவுசர் சரியான போட்டியைத் தரும் என்று எதிர்பார்க்கலாம்.

விண்டோஸ் 7 Start Menuவில் வீடியோ "லிங்" உருவாக்குவ​தற்கு

Pictures, Music ஆகியவற்றின் Folderகளை இலகுவாக சென்றடைவதற்கு விண்டோஸ் 7ன் Start Menuவில் அவற்றின் "லிங்" (link) இயல்பாகவே காணப்படும்.
ஆனால் வீடியோ Folderக்கு அவ்வாறான வசதி நேரடியாக கொடுக்கப்பட்டிருப்பதில்லை. ஆனால் அவ்வசதியை நாமாக உருவாக்க முடியும்.
1. Start Menuற்கு சென்று Rightclick செய்து Properties என்பதை தெரிவு செய்யவும்.
2. தோன்றும் சாளரத்தில் Start Menu tab ற்கு சென்று Customize ஐ தெரிவு செய்யவும்.
3. அதன் பின் தோன்றும் சாளரத்தில் Videos என்பதில் "Display as a link" என்பதை தெரிவு செய்து OK செய்யவும்.

விண்டோஸ் 7ல் மறைந்துள்ள Themes, Wallpapers ஐ பயன்படுத்து​வதற்கு

இன்று அதிகளவான பயனர்களால் பயன்படுத்தப்படும் இயங்குதளமாக விண்டோஸ் 7 காணப்படுகின்றது. இவ் இயங்குதளத்தில் நாம் அறியாத பல அம்சங்கள் மறைந்து காணப்படுகின்றன.
அதேபோல் கணணியின் பின்னணி, அமைப்பை மாற்றுவதற்கு பயன்படும் Themes, Wallpapers போன்றன காணப்படுகின்றன. 
இருந்தும் குறிப்பிட்ட அளவு வசதியே வெளிப்படையாக இருக்கின்றது. ஆனால் சில நாடுகளை பிரதிநித்துவப்படுத்தும் மேலதிக Themes, Wallpapers என்பன காணப்படுகின்றன. அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்.
1. Start menuற்கு சென்று அங்கு காணப்படும் search எனும் பகுதிக்கு சென்று C:WindowsGlobalizationMCT என தட்டச்சு செய்து Enter keyயை அழுத்தவும்.
2. தோன்றும் சாளரத்தில் MCT-AU, MCT-CA, MCT-GB, MCT-US, MCT-ZA  ஆகிய பெயர்களில் Folder காணப்படும். அதில் விதவிதமான Themes, Wallpapers காணப்படும். அவற்றை பயன்படுத்தி உங்கள் கணணியின் பின்னணி, அமைப்பை ஆகியவற்றை மாற்ற முடியும்.
அதாவது,
MCT-AU - அவுஸ்திரேலியா சம்மந்தமான Themes, Wallpapersகளை கொண்டுள்ளது.
MCT-CA - கனடா சம்மந்தமான Themes, Wallpapersகளை கொண்டுள்ளது.
MCT-GB - பிரித்தானியா சம்மந்தமான Themes, Wallpapersகளை கொண்டுள்ளது.
MCT-US - ஐக்கிய அமெரிக்கா சம்மந்தமான Themes, Wallpapersகளை கொண்டுள்ளது.
MCT-ZA - தென்னாபிரிக்கா சம்மந்தமான Themes, Wallpapersகளை கொண்டுள்ளது.

பாதுகாப்பா​ன பென்டிரைவை உருவாக்க

தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதற்கும், தகவல்களை இலகுவாக எடுத்துச் செல்வதற்கும் பென்டிரைவ்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இருந்தும் அத்தகவல்களை கணணி வைரஸ்களிடமிருந்து பாதுகாப்பது மிகவும் கடினமான ஒன்றாக காணப்படுகின்றது. இத்தொல்லையிலிருந்து விடுபடுவதற்கு USB Write Protecter என்ற ஒரு மென்பொருள் பயன்டுகின்றது.
பயன்படுத்தும் முறை:
1. குறித்த பென்டரைவை கணணியுடன் இணைக்கவும்.
2. தரப்பட்டுள்ள தரவிறக்க சுட்டிக்கு சென்று மென்பொருளை தரவிறக்கம் செய்யவும்.
3. பின் அம்மென்பொருளை இயக்கவும். அவ்வாறு இயக்கும் போது கீழே காட்டப்பட்டுள்ளவாறு ஒரு சாளரம்(Image) தோன்றும்.
4. அதில் USB write protection ON என்பதை தெரிவு செய்யவும்.
இப்பொழுது குறித்த பென்டிரைவில் காணப்படும் கோப்புக்களை அழிக்கவோ அல்லது பிரதிசெய்யவோ(copy) முடியாது. அவ்வாறு செய்ய வேண்டுமெனில் மீண்டும் மென்பொருளை இயக்கி USB write protection OFF என்பதை தெரிவு செய்ய வேண்டும்.

VLC மீடியா பிளேயரில் அறியப்படாத சில வசதிகள்

கணணியில் வீடியோக்களை பார்ப்பதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்பட்ட போதிலும் அதிகளவானர்களினால் பயன்படுத்தப்படும் மென்பொருள் VLC மீடியா பிளேயர் ஆகும்.
எனினும் இதில் பல்வேறு அம்சங்கள் வெளிப்படையாக இல்லாமல் மறைந்தே காணப்படுகின்றன. இதில் Add Watermarks, Video Converter, Free Online Radio போன்ற வசதிகள் இருப்பதை அறிந்திருப்பீர்கள்.
இருந்தும் இவற்றை விட Display On Desktop, Video Effects, Hotkeys ஆகியவையும் காணப்படுகின்றன.
1. Display On Desktop: இப்பயனுள்ள வசதி மூலம் நீங்கள் வீடியோவை பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் உங்களுடைய வேறு வேலைகளையும் செய்ய முடியும்.
உதாரணமாக MS Paint/ MS Office ல் வேலை செய்துகொண்டே வீடியோவையும் பார்த்து ரசிக்க முடியும். இதனை செயற்படுத்துதவற்கு மெனுபாரில் காணப்படும் Video என்பதில் உள்ள Display On Desktop என்பதை தெரிவு செய்ய வேண்டும்.
2. Video Effects: வீடியோக்களுக்கு விதம் விதமாக எபெக்ட் கொடுப்பதற்கு வீடியோ எடிட்டிங் மென்பொருட்களை பயன்படுத்துவார்கள். VLC மீடியா பிளேயரை ஆனால் பயன்படுத்தி வீடியோவை பார்த்துக்கொண்டிருக்கும்போதே சிலவகையான எபெக்ட்களை கொடுக்க முடியும். Tools மெனுவிலுள்ள Effects and Filter என்ற அம்சத்தை தெரிவு செய்வதன் மூலம் வீடியோக்களுக்கு எபெக்ட் கொடுக்க முடியும்.
3. Hotkeys: VLC மீடியா பிளேயரில் எந்தவொரு செயற்பாட்டை மேற்கொள்ளும் போதும் மவுசை பயன்படுத்துதல் அவசியமானது. ஆனால் இச்சிரமத்தை தவிர்ப்பதற்காக நீங்கள் விரும்பியவாறு Shortcut key அமைத்து பயன்படுத்த முடியும். Tools மெனுவில் Preferences , Hotkeys ஐ தெரிவு செய்து Shortcut keyகளை அமைத்துக்கொள்ள முடியும்.

மடிக்கணணியின் வெப்பத்தை கையாள்வதற்கான வழிமுறைகள்

கடந்த சில ஆண்டுகளாக மடிக்கணணிகளில் ஏற்படும் வெப்பம் குறித்த கவலை இவற்றைப் பயன்படுத்துவோரிடையே அதிகரித்து வருகிறது.
மடிக்கணணியின் பயன்பாடு அதிகரிப்பினால் இந்த கவலைக்கான காரணங்களையும், தீர்வுகளையும் பலரும் கண்டறிந்து வருகின்றனர்.
சில இடங்களில் மடிக்கணணிகள் கூடுதல் வெப்பத்தினால் தீ பிடித்த தகவல்களும் மக்களை அதிர்ச்சி அடையச் செய்தன. டெல், சோனி, ஏசர் போன்ற நிறுவனங்கள் தாங்கள் விற்பனை செய்த மடிக்கணணிகளில் உள்ள பேட்டரிகள் அதிக வெப்பத்தை விரைவில் அடைந்ததனால், அவற்றை வாங்கிக் கொண்டு புதிய பேட்டரிகளைத் தந்த நிகழ்வுகளும் ஏற்பட்டன.
மோசமான பேட்டரிகளைத் தவிர்த்து மடிக்கணணிகள் வெப்பம் அதிகமாக வெளிப்படுத்துவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. நாம் பயன்படுத்தும் அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களுமே அவை இயங்கத் தொடங்கியவுடன் வெப்பத்தை வெளியிடுகின்றன.
ஒரு டிவிடி பிளேயர் இயங்கிய சில நிமிடங்கள் கழித்து, அதில் கைகளை வைத்துப் பார்த்தால், இந்த வெப்பத்தின் தன்மையை அறியலாம்.
டெஸ்க்டொப் கணணிகளைக் காட்டிலும், மடிக்கணணிகள் இடம் மிகக் குறைவு. இதனால் அதில் வைக்கப்பட்டுள்ள வெப்பத்தை வெளிப்படுத்தும் எலக்ட்ரானிக் பொருட்கள் சிறிய இடத்தில் நெருக்கமாக வைக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் அமைகின்றன. நெருக்கமாக இருப்பதனால் இவற்றிலிருந்து வெளிப்படும் வெப்பம் வெளியேற மிகக் குறைந்த இடமே கிடைக்கிறது.
அடுத்த பிரச்னை இயக்க திறன். மடிக்கணணிகளில் அதிக வேகத்தில் இயங்கும் கூடுதல் திறன் கொண்ட எலக்ட்ரானிக் பொருட்கள் பொருத்தப்படுகின்றன. பதியப்படும் இயங்குதளங்களும் அவை வேகமாக இயங்க, இந்த எலக்ட்ரானிக் பொருட்களை கூடுதலாக இயக்குகின்றன. இதனால் அதிக வெப்பம் உருவாகிறது.
மடிக்கணணிகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் இது தெரியும். அதனால் தான், வெப்பத்தினை வெளியேற்றும் வகையில் சிறிய விசிறிகள், ஹீட் ஸிங்க் எனப்படும் தகடுகளைப் பயன்படுத்துகின்றனர்.
ஆனால் இவற்றால் முழுமையாக வெப்பத்தினை வெளியேற்ற முடியவில்லை. விசிறிகள் காலப் போக்கில் வேகம் குறைந்து இயங்குவதால், வெப்பம் வெளியாவதில் பிரச்னை ஏற்படுகிறது.
பொதுவாக மடிக்கணணியில் வன்தட்டில் பிரச்னை ஏற்பட இந்த வெப்பம் அடிப்படை காரணமாக உள்ளது. எனவே இந்த வெப்பத்தினை வெளியேற்றுவதிலும், அதனை குளிரவைப்பதிலும் கவனம் செலுத்தினால் பல பிரச்னைகள் ஏற்படுவதனை முன்கூட்டியே தடுக்கலாம்.
விசிறிகள் சோதனை: மடிக்கணணியில் வெப்பம் உருவாகிறது என்று தெரிந்தால் உடனே திறந்து இயக்கத்தின் போது அதில் பொருத்தப்பட்டிருக்கும் அனைத்து விசிறிகளும் சரியாக அதன் அதிக பட்ச வேகத்தில் இயங்குகின்றனவா எனச் சோதிக்க வேண்டும். பெரும்பாலும் இவற்றை நாம் திறந்து பார்க்க இயலாது.
காற்று துளைகளின் சுத்தம்: வெப்பம் வெளியேறுவதற்காக அமைக்கப்பட்டிருக் கும் காற்று துளைகளை அடிக்கடி கவனிக்க வேண்டும். இவற்றில் தூசு படிந்து அடைத்துக் கொண்டிருந்தால், வெப்பம் விரைவாக வெளியேற்றப்பட மாட்டாது. எனவே சுத்தம் செய்வது அவசியம்.
பயாஸ் சோதனை: நம் பயாஸ் செட்டிங்ஸ் மாற்றி அமைப்பதன் மூலம் வெப்பம் உருவாவதனை அறியலாம். இந்த அமைப்பு எப்படி இருக்க வேண்டும் அல்லது எப்படி இதனை மாற்றலாம் என்பதற்கு உங்கள் மடிக்கணணி தயரித்த நிறுவனத்தின் இணைய தளம் சென்று பார்க்கவும். சில நிறுவனங்கள் இந்த பயாஸ் அமைப்பினையும் அப்டேட் செய்து புரோகிராம்களை வெளியிட்டி ருப்பார்கள்.
பொதுவான சில பழக்கவழக்கங்களையும் நாம் மேற்கொண்டால் வெப்பம் உருவாவதனைத் தடுக்கலாம்.
வெப்பமான, சூரிய ஒளிபடும் இடத்தில் வைத்து மடிக்கணணியை இயக்கக்கூடாது. அதே போல மூடப்பட்ட கார், சிறிய அறை ஆகியவற்றில் இயக்கக் கூடாது. ரேடியேட்டர்கள், வெப்பம் வெளியேறும் இடங்கள் அருகே கணணியை வைத்திருக்கக்கூடாது.
இதை மடிக்கணணி என அழைத்தாலும் நம் தொடைகளின் மீது வைத்து இயக்குவது கூடாது. இதனால் வெப்பம் வெளியேறும் வழிகள் தடைபடும். நம் உடலையும் இந்த வெப்பம் தாக்கும். மெத்தைகள், துணிவிரிப்புகள் ஆகியவற்றின் மீது இவற்றை வைத்து இயக்குவதும் தவறு.
மடிக்கணணியில் வெப்பம் உருவாவதனைத் தடுக்க முடியாது. எனவே வெப்பம் எளிதில் விரைவாக வெளியேற்றப்படும் வழிகளை நாம் நம் பழக்கத்தின் மூலம் தடுக்காமல் இயங்க வேண்டும்.
மேலும் கூடுதல் துணை சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் வெப்பத்தினை வெளியேற்றுவதனை விரைவுபடுத்தலாம். இந்த வழிகளை மேற்கொண்டால் வெப்பமானது கணணியின் மற்ற பாகங்களைத் தாக்குவதனைத் தடுக்கலாம்.

வீடியோக்களை YouTubeல் துல்லியமாக தேடுவதற்கு

வீடியோக்களின் பொக்கிசமாக திகழும் மிகப்பிரபல்யமான தளம் YouTube ஆகும். இங்கு காணப்படும் பல்லாயிரக்கணக்கான வீடியோக்களுக்குள் நாம் எதிர்பார்க்கும் வீடியோவை இலகுவாக பெறுவதற்கு சில வழிமுறைகள் காணப்படுகின்றன.
1. Channel முறையில் தேடுதல்: அதாவது இங்கு தரவேற்றப்பட்டிருக்கும் அனைத்து வீடியோக்களும் வெவ்வேறு வகைகளின் அடிப்டையிலேயே தரவேற்றப்பட்டிருக்கும்.
உதாரணமாக நாடகங்கள், சினிமா, நகைச்சுவை என்று வகைப்படுத்தப்பட்டிருக்கும். ஆகவே உங்கள் தேடலின்போது பின்வருமாறு பயன்படுத்தவும் Royal wedding, channel
2. (+) குறியை பயன்படுத்தல்: உதைபந்தாட்டத்தில் 2011ம் ஆண்டு போடப்பட்ட மிகச்சிறந்த  கோல்கள் பற்றிய தேடலின்போது football hits+2011 என்றவாறு பயன்படுத்தலாம்.
3. (,) குறியை பயன்படுத்துதல்: உதாரணமாக 3டி வீடியோக்களை தரவிறக்கவேண்டிய தேவை ஏற்படின் பின்வருமாறு பயன்படுத்தலாம் - Avatar, 3D
4. இரட்டைத் தொழிற்பாடு: இச்செயற்பாட்டின்போது (+),(,) ஆகிய குறிகள் பயன்படுத்தப்படலாம். உதாரணம்-Mission impossible +2011, HD

Wednesday, 25 January 2012

ஆபாச தளங்களுக்கு வீடியோ சப்ளை செய்யும் யாழ்ப்பாண ஆசாமி! போட்டோக்களும், ஆதாரங்களும் இணைக்கப்பட்டிருக்கிறது:

newjaffna.com எனும் பெயரைக் கேட்டாலே யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள மக்களில் அதிகளவானோருக்கு ஓர் இனம் புரியாத நடுக்கம் ஏற்படும். யாழ்ப்பாணக் குடாநாட்டில் மூத்திரச் சந்துகளில் சிறு நீர்கழிக்க ஒதுங்குவோர் முதல் சொந்த மனைவியுடன் பேருந்தில் அளவளாவி அன்பாகச் செல்லம் பொழிந்து செல்லும் கணவன்மார் வரை எல்லோருக்கும் இவர்கள் பெயரைக் கேட்டாலே நடுக்கம் உருவாகும். எம்மை இந்த newjaffna குழுவினர் வீடியோ எடுத்து ஆபாசத் தளங்களிலும், தமது அந்தரங்கத் தளத்திலும் பிரசுரித்து அசிங்கத்திற்குள்ளாக்கி விடுவார்களோ என எண்ணி; அனைவரும் அச்சத்திற்குள்ளாகின்ற இழி நிலையினை இந்த இணையத் தளம் இன்று யாழ்ப்பாண மக்களுக்கு கொடுத்திருக்கிறது.யாழ்ப்பாண கலாச்சாரத்தினை கட்டிக்காக்கப் புறப்பட்டிருக்கிறோம் என்று களமிறங்கியிருக்கும் இந்த newjaffna.com இணையத் தளத்தின் இன்னோர் முகத்தினைப் பலரும் அறிந்திருக்கமாட்டார்கள்.
நியூ ஜப்னா தளத்தின் உரிமையாளர் & காம வியாபாரி சிவராஜா பிரசாத்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் எங்காவது ஓர் ஓரமாக கொஞ்சிக் குலாவி மகிழும் காதலர்கள், மூத்திர சந்தினுள் சிறுநீர் கழிக்க ஒதுங்கும் ஆண்கள் - பெண்கள், மாணவர்களைத் தண்டிக்கும் கல்லூரி ஆசிரியர்கள், அதிபர்கள், மற்றும் இளம் மாணவர்கள் எனப் பலரும் மன்மத லீலைகள் செய்து யாழ்ப்பாணத்தைச் சீரழிக்கிறார்கள் என தமது திருட்டுக் கும்பல் மூலம் வீடியோ எடுத்து இணையத் தளங்களில் பிரசுரித்து மகிழ்கின்றது இந்த வக்கிர குணம் கொண்ட மிருக கூட்டம். குடும்பங்களில் இடம் பெறும் குடும்பச் சண்டைகள், பிறந்த நாள் விழாவில் சாராயம், பியர் அருந்தி மகிழும் இளசுகளின் மகிழ்ச்சியான காட்சிகள் என அனைவரது செயற்பாடுகளையும் படம் பிடித்து தமது தளத்தில் இணைத்து புகழ் தேடி அலையும் இந்த வக்கிர கும்பல் செய்யும் இன்னோர் கேவலமான செயல் தான் தமிழ் டர்ட்டி ஸ்டோரிஸ் தளத்திற்கு யாழ்ப்பாணத்தில் இடம் பெறும் அந்தரங்க நிகழ்வுகளை வீடியோ பிடித்து அனுப்பி மகிழ்வதாகும்.

நியூ ஜப்னா இணையத் தளத்தில் பிரசுரமாகும் செய்திகளில் தாம் திருட்டுத்தனமாக பிடித்த Scandal வீடியோக்களில் உள்ள நபரின் முகத்தினை மாத்திரம் மறைத்து பிரசுரித்துப் புகழ் தேடுவார்கள் சிவராஜா பிரசாத் தலமையிலான குழுவினர். யாழ்ப்பாண கலாச்சாரத்தினைக் கட்டிக்காக்க புறப்பட்டிருக்கிறோம் என்று கூறும் இந்த வக்கிர குணங் கொண்ட மனிதர்கள் தமது செய்திகளினால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் கலாச்சார சீரழிவுகள் தடுத்து நிறுத்தப்படுவதாக மக்கள் மத்தியில் மார்தட்டியவாறு; மறு புறத்தில் அப்பாவி மக்களின் கண்ணில் மண்ணைத் தூவித் தாம் திருட்டுத்தனமாக எடுத்த வீடியோக்களின் ஒரிஜினல் தொகுப்பினை முகத்தினை மறைக்காது "இலங்கையில் இன்ப வெறி!" யாழ்ப்பாண தேங்காய் சைஸ் முலைப் பெண்களின் பஸ் காட்சிகள்", "யாழ்ப்பாணப் பஸ்ஸில் இடம் பெறும் காம லீலைகள்" என தலைப்பிட்டு தமிழ் டர்ட்டி ஸ்டோரிஸ் தளத்தில் பிரசுரித்து மகிழ அனுப்புகின்றனர் இந்த காமுகர் கூட்டத்தினர்.
கோல்டன் ஈகிள் எனப்படும் யாழ்ப்பாண தனியார் நிறுவன உரிமையாளரின் செக்ஸ் லீலைகள் என்றோர் வீடியோவும், யாழ்ப்பாணத்தில் உள்ள திருக்குடும்பம் கன்னியர் மடப் பாடசாலை மாணவியின் காதல் லீலைகள் இது என்ற தலைப்பின் கீழ் மற்றுமோர் வீடியோவும் கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்டதாக கூறி இந்த நியூ ஜப்னா கும்பலினால் பரபரப்பினை ஏற்படுத்தும் வண்ணம் இணையத்தளத்தில் முகத்தினை மாத்திரம் மறைத்து வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் இதே கும்பல் மேற்படி வீடியோக்களுடன், யாழ்ப்பாணத்தில் பஸ்ஸினுள் உரசுகின்ற ஆண்கள், ஒன்னுக்கடிக்கும் பெண்கள் எனப் பலரது வீடியோக்களையும் திருட்டுத்தனமாக எடுத்து ஆபாசத் தளங்களிற்கு அனுப்பி மகிழ்கின்றது. ஸோ...தாம் எடுத்த ஒரிஜினல் வீடியோவில் உள்ள நபரின் முகத்தினை மறைத்து தமது நியூஜப்னா தளத்தில் பிரசுரித்து விட்டு, ஒரிஜினல் வீடியோவினை மாத்திரம் மாற்றமின்றி செக்ஸ் தளங்களுக்கு அனுப்பி மகிழ்கின்றது சிவராஜா பிரசாத் தலமையிலான கும்பல்.

ஆபாசத் தளங்களுக்கு வீடியோக்களை அனுப்பி மகிழும் கும்பலின் தலைவர் பற்றிய விபரங்கள்:
பெயர்: சிவராஜா பிரசாத்.
பிறந்த இடம்: புன்னாலைக்கட்டுவன், யாழ்ப்பாணம்,
தற்போது வாழும் இடம்: பிரான்ஸ்.
தற்போது வாழும் இடத்தின் முகவரி: 
8 Square Sarah Bernhardt,
Chez mme nawendarlingam,
77185,
Lognes, 
France.
தொலைபேசி இலக்கம்:             0033-751241102      
மற்றுமோர் தொலைபேசி இலக்கம்:             0033-619661650      
கல்வி கற்றது: யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி/ சென்.ஜோன்ஸ் கல்லூரி 2005ம் வருட உயர்தரப் பிரிவு.
இலங்கை அரசிற்கும், யாழ்ப்பாணத்தில் உள்ள சமூக நலன் விரும்பிகளுக்கும் மிகவும் வேண்டப்பட்ட நபராக இப்பொழுது தேடப்படுவோர் பட்டியலில் உள்ளார். 
France நாட்டில் இந்த காம வியாபாரி வாழும் வீடு இது தான்.
எதிர்காலத்தில் எதிர் நோக்கவிருக்கும் சவால்: பிரான்ஸ் நாட்டில் வாழும் ஈழ மக்களின் மூலம் இவரது சமூக கலாச்சார செயற்பாட்டிற்கு எதிராகத் தொடரப்படவிருக்கும் வழக்கிற்கு முகங் கொடுப்பது.
அண்மைய சவால்: இலங்கை இராணுவ முகாம் ஒன்றினுள் தனது உடன் பிறந்த சகோதரி அவிழ்த்துப் போட்ட ஆட்டம் போட்டிருந்த ஆபாச நடனத்தினை யாரோ வீடியோ பிடித்து இணையத் தளங்களில் போட்டிருப்பதன் மூலம், வலியை உணர்ந்தமை. ஊர் மானத்தை வாங்க நினைத்தால், தன் மானமும் போகும் என உணர்ந்து கொண்டவை.

இந்தக் கும்பலின் செயற்பாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் நலன் விரும்பிகள் இப்போது களமிறங்கியிருக்கிறார்கள்.முதற் கட்ட நடவடிக்கையாக இரண்டு நாட்களுக்கு முன்பதாக "Operation அறிவன்" என்ற நடவடிக்கையின் கீழ் இவரது இணையத் தளம் முடக்கப்பட்டிருந்தது. எதிர் காலத்தில் ஆபாசத் தளங்களுக்கு ஈழ மக்களின் அந்தரங்க செயற்பாடுகளைப் படம் பிடித்து இந் நபர் அனுப்புவதை நிறுத்தும் வரை இவரது தளங்களை முடக்கும் செயற்பாடுகள் தொடரும் என ஒப்பரேசன் அறிவன் குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.  இவரது கூட்டத்தினைச் சேர்ந்த யாழ்ப்பாணத்தில் வாழும் திருட்டு வீடியோ பிடிப்பாளர்களின் நடவடிக்கைகளும் வெகு விரைவில் குடாநாட்டில் வைத்துக் கட்டுப்படுத்தப்படும் என ஒப்பரேசன் அறிவன் குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.பிரான்ஸ் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக பொதுத் தளங்களுக்கு திருட்டுத் தனமாக தனி நபரின் அந்தரங்கங்களைத் திருடி விநியோகம் செய்யும் குற்றத்தின் கீழ் இவர் மீது வழக்குத் தொடரவிருப்பதாக பிரான்ஸ் நாட்டில் வாழும் ஈழச் சகோதரர்கள் தெரிவித்துள்ளார்கள். 
ஆபாசப் படங்களில் நடிப்பதற்கு ஆண், பெண்களைத் தெரிவு செய்து, இது தான் ஆபாசப் படங்கள் எனப் பெயரிட்டு, படம் தயாரித்து இணையத் தளங்களில் பிரசுரித்து மகிழலாம். ஆனால் சைக்கோ வியாதி கொண்டு பிரான்ஸில் வாழ்ந்தவாறு அப்பாவி யாழ்ப்பாண இளைஞர்களின் உதவியுடன், கடற்கரைகளிலும்,பொது மலசல கூடங்களிலும்,மற்றும் பொது இடங்களிலும் நிகழும் மக்களின் அந்தரங்கச் செயற்பாடுகளை வீடியோப் படம் பிடித்து ஆபாசத் தளங்களுக்கு அனுப்பி மகிழ்வது அசிங்கம் அல்லவா? வக்கிர குணங் கொண்டவர்கள் திருந்தினால் யாழ்ப்பாண சமூகத்தின் சீரழிவு பற்றிய பொய்களும், ஊதிப் பெருப்பிக்கப்பட்ட செய்திகளும் அடியோடு இல்லாதொழிக்கப்படும். இல்லையேல் இவர்களின் சுய இன்பத்திற்காக அப்பாவி மக்களின் அந்தரங்க வாழ்வு தான் பலிக்கடாவாக்கப்படும்.