Saturday, 6 August 2011
ஓர் நாள் உன்னை காணாவிடில் எங்கே உன் அன்பென்று கேட்கின்றன
Friday, 5 August 2011
Thursday, 4 August 2011
தவழ்ந்து விழுந்து எழுந்து
![]() |
| தவழ்ந்து விழுந்து எழுந்து....... |
தவழ்ந்து விழுந்து எழுந்து தடுமாறி மறு படியும்
நடந்து பழகினால் மட்டுமே நேராய் நிதானமாய்
நடந்திட முடியும் மானிடராய் பிறந்து விட்டால்
இது போல் தான் அவனின் ஒவ்வொரு செயல்களும்
Wednesday, 3 August 2011
இது என்ன தெரியுமா ?
லண்டனில் தமிழ் சாப்பாட்டு கடை ஒன்றில் சாப்பிட தயாரான நிலையில் பொரித்த கோழி ஒன்றை இவ்வாறு அலங்கார படுத்தி வைத்துள்ளனர் . இது ஒரு தமிழரின் கை வண்ணம் . தேசிக்காய் , மிளகாய் போன்றவற்றை கொண்டு தலை பகுதி அலங்காரம் செயபட்டுள்ளது .
Tuesday, 2 August 2011
மனமே! ஏன் மாறினாய்!
மனமே! மனமே! ஏன் மாறினாய்! என்னை கேட்காமல்
இதுவரை நான் உன்னை வெல்வேன். என எண்ணியிருந்தேன்.
நீ என்னை வெல்வாய் என ஒருபோதும் எண்ணியதில்லை.
என்னுள் இருந்து என்னை வென்று விட்டாய் நீ.
இனி உன்னை தோற்கடிக்க முடியுமா ? என்னால்
நான் செய்யவேண்டியது என்ன சொல் மனமே ! !!!!!
Monday, 1 August 2011
என்னமோ எதோ .................
ஏதோ ஏதோ சொல்ல வந்தேன் -ஆனாலும்
வார்த்தைகளை கூற என் உதடு மறுத்தது...♥
மங்கள ஓசைகள் கேட்டன காதில்
மங்கை அவள் வருகை தெரிந்தது மனதில்வந்த அவள்- பார்த்தது பார்வை
வார்த்தைகளை கூற என் உதடு மறுத்தது...♥
மங்கள ஓசைகள் கேட்டன காதில்
மங்கை அவள் வருகை தெரிந்தது மனதில்வந்த அவள்- பார்த்தது பார்வை
மார்பினுள் ஏதோ அடித்தது ஓசை!..♥♥
Sunday, 31 July 2011
நான் யார்? நீ யார் ? அவன் யார் ?
இவ்வுலகில் நூறு சதவீதம் நல்லவனுமில்லை !
நூறு சதவீதம் கெட்டவனும் இல்லை !
நான் யார்? நீ யார் ? அவன் யார் ?
அவரவர் கேட்டுகொள்ளுங்கள் உங்களிடமே !
என் விருப்பம்
ஒருவருடைய பிரச்சனைக்கு தீர்வாக மட்டுமே இருக்க ஆசைபடுகிறேன்.
அவரது பிரச்சனைக்கு நானே காரணமாக அமைந்து விடவேண்டும்,
என்று ஒருபோதும் விரும்புவதில்லை .
Saturday, 30 July 2011
நிமிடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இணையதளத் தாக்குதல்கள்
mperva’பாதுகாப்பு நிறுவன ஆய்வின்படி, சராசரியாக ஒரு மணித்தியாலத்தில் 27 தாக்குதல்கள் அல்லது இரண்டு நிமிடங்களுக்கு ஒரு தாக்குதல் இணையத்தளங்களில் நடைபெறுகின்றன. இந்நிறுவனம் நடத்திய ஆய்வில் கடந்த வருடம் டிசம்பரிலிருந்து இந்த வருடம் மே வரை 10 மில்லியன் தாக்குதல்கள் 30 பல்வேறுபட்ட நிறுவனங்களது இணையத்தளங்களையும் அரசின் இணையத்தளங்களையும் இலக்குவைத்து நடத்தப்பட்டுள்ளன.
இத்தாக்குதல்கள், பெரும்பாலும் இணையத்தளங்களின் பலவீனமான பகுதியை நோக்கியே பயணிப்பதாகத் தெரியவருகின்றது. இருப்பினும் இத்தாக்குதல் நிகழ்ச்சி நிரற்படுத்தப்பட்டுள்ளதால் மணிக்கு 25,000 ஆக, அதாவது விநாடிக்கு 7 தாக்குதல்கள் எனும்படி உயரக்கூடிய சாத்தியம் உள்ளதென Imperva கூறுகின்றது.
இத்தாக்குதல் பெரும்பாலானவை எங்கிருந்து அனுப்பப்படுகின்றன?
இவற்றில் 61 வீதத் தாக்குதல்களும் அமெரிக்காவிலுள்ள தன்னியக்க மென்பொருள்களினாலேயே உருவாக்கப்படுகின்றன. எனினும், இவை எங்கிருந்து கட்டுப்படுத்தப்படுகின்றன என்பது தெரியவில்லை.
பெரும்பாலான தாக்குதலாளர்கள் ஒன்லைனில் தங்களை மறைத்தே வைத்திருக்கின்றார்கள். தங்களது இணைய இணைப்பினை ஒரு மாற்று இணையத்தினூடாகவே (proxy) முதலில் வெளிப்படுத்துவர். இவை புகழ்பெற்ற அனாமதேய Onion Router அல்லது TOR இன்மூலம் செய்யப்பப்படும்.
அமெரிக்காவின் பின்னர், சுவீடன் மற்றும் பிரான்சைத் தொடர்ந்து, சீனா தமது நாட்டில் 10 வீதத் தாக்குதல் நடந்ததெனக் கூறியுள்ளது. ஆகையால் இந்த இடங்களிலுள்ள கணினிகளால் தான் பெருமளவு தாக்குதல்கள் உருவாக்கப்படுகின்றனவாயினும், இந்தக் கணினிகள் யாரோ ஒருவரால் தொலைதூரத்தில் வைத்துக் கட்டுப்படுத்தப்படும் ஒரு வைரசினால் (அல்லது கணினி தன்னியக்க றொபோவால்) மட்டுமே பாதிக்கப்படலாம்.இந்த நபர் உலகின் ஏதோவொரு மூலையில் இருப்பவராகவும் அனாமதேய வழி ஒன்றினூடாகத் தத்தமக்கென இணைய நெரிசலை ஏற்படுத்திக் கொண்டிருப்பவராகவும் இருப்பார்.
தாக்குதல்கள் தன்னியக்கமாகவே உருவாக்கப்படலாம் என்ற உண்மையை மனதிற்கொள்ளவேண்டும். இதனால்தான் தாக்குதல்கள் அதிகளவில் வெளிப்படுகின்றன. Imperva முதன்மைத் தொழிநுட்ப அதிகாரி அமிச்சாய் ஷல்மான் கூறுகையில், ‘மென்பொருள் திருடர்கள் நிகழ்ச்சிநிரற்படுத்தலைத் தமக்கு அனுகூலமாக்கிய முறைதான், குற்றவியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளில் ஒன்றாக உள்ளது.
கார் அல்லது பணக் களவுகளை ஒருவரால் நிகழ்ச்சிநிரற்படுத்த முடியாது. ஆனால் தரவுக் களவை நிகழ்ச்சிநிரற்படுத்த முடியும். நிதித்தாக்க முறைகளில், கணினிக் குற்றங்கள் மூலம் பொருட்குற்றங்களை அதிகரிக்கும் மூலகாரணமாக நிகழ்ச்சிநிரற்;படுத்தலே உள்ளது.
Friday, 29 July 2011
Thursday, 28 July 2011
நீ வெல்ல வேண்டி ............
ஏதோதோ எழுதுகிறேன்..........
என்னை ஓர் பைத்தியமாக்கி...
ஏதேதோ உளறுகிறேன்.........
நீ ஏமாந்து போககூடாது .......
என்பதற்காய் என்னை
நான் ஒவ்வொரு முறையும் தோற்கடிகிறேன் உன்னுள் ........
நீ வெல்ல வேண்டி ............
Subscribe to:
Posts (Atom)




