Wednesday, 30 November 2011

இனி தொலைக்காட்சிப் பெட்டிகளும் உங்களை உன்னிப்பாக கண்காணிக்கும்

எம்மில் பெரும்பாலானோர் அடிக்கடி தொலைக்காட்சிகளைத் தான் அதில் வரும் அரசியல்வாதிகளின் அலட்டல்களின்போது திட்டுவோம். ஆனால் இனி அப்படிப் பேசமுடியாது.
இனி நாங்கள் அவதானமாகத்தான் கதைக்கவேண்டும். குறிப்பாக தொலைக்காட்சிகளை நோக்கிக் காட்டும் சைகைகளையிட்டும் கவனமாக இருங்கள்.
iTV என்ற புதிய தொலைக்காட்சியை அப்பிள் கணினி நிறுவனம் உருவாக்குகின்றது. இது உங்களது கத்தல்களை மட்டுமல்லாது உங்களது சைகைகளையும் பார்ப்பது மட்டுமல்லாமல் விளங்கியும் கொள்கின்றது.
ஓர் அமெரிக்க ஆய்வாளரின் கருத்துப்படி அடுத்த வருட இறுதியில் இது பயன்பாட்டிற்கு வரும். இந்தத் தொழினுட்பமே ஏற்கனவே Xbox விளையாட்டுக் கருவியில் இருக்கிறது.
எனினும் இந்தப் புதிய தொலைக்காட்சிக் கட்டுப்படுத்தும் வசதி அப்பிளின் முன்னேற்றம் என்றே கூறலாம்.
இந்தப் புதிய தொலைக்காட்சியில் இணையத்தில் கிடைக்கும் அனைத்துப் படங்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் BskyB போன்ற தொலைக்காட்சி நிறுவனங்களுடன் வலுவான போட்டியையும் உருவாக்கியுள்ளது எனலாம்.
இதன்மூலம் இவர்கள் ‘நான் முற்றுமுழுதாகவே இலகுவாகப் பயன்படுத்தக்கூடிய ஒருங்கிணைக்கப்பட்ட தொலைக்காட்சியொன்றை உருவாக்க விரும்புகின்றேன்’ என்று கூறிச்சென்ற அப்பிளின் முன்னாள் நிறுவுனர் Steve Jobs இன் எதிர்காலக் கனவினை உருவாக்கியதாகக் கூறுகின்றனர். 
இந்தச் சைகைகளை வீடியோக்களைத் திருத்துவதற்கும் தொலைக்காட்சியிலிருந்து ஒரு தொலைபேசிக்குப் படங்களை மாற்றமும் பயன்படுத்த முடியும் என இந்நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர்.

Facebook, Twitterஇனால் வேலை இழக்கும் அப்பாவி இளைஞர்கள்

அவுஸ்திரேலியாவின் 12 வீதமான வேலை வழங்குனர்கள் தமது விண்ணப்பதாரிகளின் Facebook  கணக்குகளைப் பார்த்து அவர்களை மறுப்பதாக Testra என்ற நிறுவனத்தின் கணிப்புக் கூறுகின்றது.
பெரும்பாலான அவுஸ்திரேலிய வேலை வழங்குநர்களும் சமூக வலையமைப்புகளைப் பயன்படுத்துவதால் தமது பணியாளர்களின் விபரங்களை அவர்களது சமூகப் பக்கங்களில் பார்த்து விண்ணப்பங்களை நீக்குவதை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இந்த ஆய்வு எவ்வாறு, எப்போது மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றிய விடயங்களை இந்நிறுவனம் குறிப்பிடவில்லை.
எனினும் இதில் பொருத்தமற்ற படங்களை வெளியிடுவது (31வீத்ததினர்) மற்றும் படங்கள் பற்றிய பொருத்தமற்ற கருத்துக்களை வெளியிடுவது (37 வீதத்தினர்) போன்றவர்கள் பற்றியும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் நிறுவன உயர் அதிகாரிகள் தமது பணியாளர்கள் தம்மைப்பற்றி அல்லது நிறுவனத்தினைப் பற்றி மோசமான கருத்துக்களை வெளியிடவில்லை என கூறப்படுகிறது.
இதேவேளை தமது பணியாளர்களை 18 வீதமானோர் கண்காணிப்பதாகவும் 15 வீதமானோர் தமது பணியாளர்களின் உற்பத்திகள் பற்றிக் கண்காணிப்பதாகவும் கூறப்படுகின்றது.
ஐந்தில் ஒரு முதலாளிகள்தான் Facebook இல் தமது பணியாளர்களுடன் நண்பர்களாக இருக்கின்றனர் என இந்த ஆய்வு கூறுகிறது.
அத்துடன் Facebookஇல் தான் 41  வீதமானோர் தமது விண்ணப்பத்தாரிகளின் விபரங்களை அவர்களது பக்கங்களில் பார்க்கின்றனர்.
இதில் 31 வீதத்தினர் LindeIn பக்கங்களிலும் 14 வீதத்தினர் Twitter இலும் பார்க்கின்றனர் என்றும் இவ் ஆய்வு முடிவு கூறுகிறது.

உங்களின் இரகசியங்களை Facebook விளம்பரதாரர்களுக்கு விற்கிறது

Facebook தனது பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களில் பெருமளவானவற்றை  வெளியே விளம்பரப்படுத்துவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஐரோப்பிய அமைப்பினால் Facebook தனது பயனாளர்களின் அரசியல், பாலியல் மற்றும் சமய நம்பிக்கைகள் பற்றிய தகவல்களை வெளியிடும் முறையை நிறுத்தப் போவதாகக் கூறியுள்ளது.
நவீன மென்பொருளைப் பயன்படுத்துவதன் மூலம் இந்நிறுவனம் மக்களின் செயற்பாடுகளைப் பெற்றுக் கொண்டு அவற்றை விளம்பரதாரர்களுக்கு அனுப்புவதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், இந்த தனிப்பட்ட கருத்துக்கள் மீறப்படுவது தொடர்பாக ஜனவரியில் EC Directive என்ற புதியதொரு  அமைப்பு ஆரம்பிக்கப்படவுள்ளது.
இவ் அமைப்பானது பயனாளர்களால் அனுமதிக்கப்படும் தகவலைத் தவிர  வேறொந்தத் தகவல்களையும் விளம்பரப்படுத்துவதைத் தடைசெய்யும் எனக் கூறப்படுகின்றது.
இங்கு பெறப்படும் தகவல்கள் அனைத்தும் அமெரிக்காவிலுள்ள கணினிகளில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் Facebook இனால் இதன் சட்டங்கள் மீறப்பட்டால் அதன்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்  அல்லது பாரியளவில் தண்டப்பணம் அறவிடப்படுமென்று கூறப்படுகின்றது.
இந்த நகர்வானது அடுத்த வருடம் Wall Street இன் பணமாற்றுத் திட்டத்தில் பங்குபற்ற நினைத்த Facebook இன் திட்டங்களைப் பாதிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்த அமைப்பானது தற்போதைய தொழினுட்ப முன்னேற்றங்களுடனான ஐரோப்பிய தரவுப் பாதுகாப்புச் சட்டங்களைத் திருத்தும் என்றும் ஐரோப்பாவெங்கும் இது நடைமுறையிலுள்ளது என்பதை உறுதிப்படுத்துமென்றும் கூறப்படுகின்றது.
இதனால் ஐரோப்பிய நாடுகளிலுள்ள கொள்வனவாளர்கள் தமது தரவுகள் உறுதியாகப் பாதுகாக்கப்பட்டுள்ளனவா என்று  பார்க்கவேண்டும்.
ஒரு நிறுவனத்தினால் ஆராயப்பட்டு களஞ்சியப்படுத்தப்படும் பயனாளர்களின் தரவுகள் மட்டும் ஆராயப்படுவதில்லை.
அவர்களது பக்கங்களில் அவர்கள் தெரிவுசெய்யும் like மற்றும் dislike விபரங்களும் ஆராயப்படுகின்றதாகக் கூறப்படுகின்றது.
இதில் ஒருவரின் நண்பர்கள், குடும்பங்கள் மற்றும் கல்விசார் பின்னணிகள் பற்றிய தகவல்களும் இந்நிறுவனத்தினால் சேகரிக்கப்படுவதோடு அவர்களது வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்களையும் கண்டுபிடிக்கின்றது.
இவற்றையெல்லாம் பெற்று ஒரு பெண் ஒரு மணப்பெண்ணாக வரக்கூடிய நிலையுள்ளதைக் கண்டுபிடித்து அவர்பற்றி விளம்பரங்களைத் திருமணப் படப்பிடிப்பாளர்களுக்குத் தெரிவிக்க விளம்பரம் செய்கின்றது.
இதுபோன்று இசையினைக் கேட்பவர்களின் பெறுமதியான விடயங்களையும் பெற்று விளம்பரதாரர்களுக்குக் கொடுக்கின்றது. இவ்வாறு நண்பர்களிடம் ஒவ்வொருவரும் பகிர்ந்துகொள்ளும் விபரங்களையும் அந்நிறுவனம் வர்த்தக நோக்கங்களிற்காகப் பயன்படுத்தலாம்.
எனினும் இந்த நிறுவனம் தான் தகவல்களை விளம்பரத்திற்காகப் பயன்படுத்தவில்லையென்று கூறிவருகின்றது.
மக்ஸ் ஸ்கிறீம்ஸ் என்ற ஓஸ்ரியாவைச் சேர்ந்த மாணவன் ஒருவன் தன்னைப் பற்றி என்ன விபரங்களை அது வைத்துள்ளதெனக் கேட்டிருந்தான். அதற்கு அந்நிறுவனம் 1,222 பக்கங்கள் கொண்ட ஓர் இறுவட்டினை அனுப்பிவைத்திருந்தது.
எனினும் அனுப்பிவைத்த விபரங்களில் முழு விபரங்களும் இல்லையென அம்மாணவன் தரவுக் கண்காணிப்பு நிறுவனங்களிடம் முறையிட்டிருந்தான்.
அடுத்த வாரம், Facebook நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள அயர்லாந்தில் வைத்து அந்நிறுவனத்தின் கணக்கெடுப்புகள் பற்றி தரவுப் பாதுகாப்பு அமைப்பினால் மேற்கொள்ளப்படுமென்றும் கூறப்படுகின்றது.
அனைத்து 800 மில்லியன் Facebook பயனாளர்களும் அவர்கள் அறிந்தோ அறியாமலே தமது தரவுத் தகவல்களை அந்நிறுவனம் பயன்படுத்த சம்மதித்துவிடுகின்றார்கள்.
ஏனெனில், இவர்கள் Sign up செய்யும்போது 4000 சொற்களடங்கிய ஒப்பந்தமொன்றை ஏற்றுக்கொண்டுதான் நுழைகின்றனர்.
இந்த ஒப்பந்தத்தினைப் பார்ப்பதற்கு ஒவ்வொரு பக்கத்தின கீழுள்ள சிறிய எழுத்துக்கெண்ட link இனை சொடுக்கிப் பார்க்கலாம்.
Facebook பாரியளவில் மைக்ரோசொப்ற்றுடன் ஒரு விளம்பர ஒப்பந்தத்தினை ஏற்படுத்திக் கொண்டது. ஆனால் 2009 இல்தான் அதன் படிப்படியான விளம்பர வளர்ச்சி ஏற்பட்டது.
இந்த வளர்ச்சிதான் Facebook இனை ஒரு பங்குச்சந்தைக்குள் நுழையத் தயாராக்கியதெனலாம்.
பிரித்தானியாவில் படிப்படியான அறிமுக விளம்பரங்களினால் 25மில்லியன் பவுண்கள் கடந்த இரண்டு வருடங்களில் பெறப்படுகின்றதெனக் கூறப்படுகின்றது.
எனினும் பயனளார்கள் எதிர்பார்க்கும் முறையில்தான் எந்தவொரு தரவுகளும் சேகரிக்கப்படவேண்டுமென பிரித்தானியத் தரவு அமைப்பின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
தனிப்பட்ட தரவானது மூன்றாவது நபரிடம் கொடுக்கப்பட்டால் அல்லது விளம்பரத்திற்காகப் பயன்படுத்தப்பட்டால் இதுபற்றி அப்பயனாளருக்குத் தெளிவுபடுத்தப்பட வேண்டுமென்றும் கூறப்படுகின்றது.

Sunday, 20 November 2011

நோக்கியா வர்த்தகத்தை முன்னுக்கு கொண்டுசெல்ல உதவும் லூமியா 800 கைபேசி அறிமுகம்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைத் தன் மொபைல் போன்களில் அமைத்துத் தன் எதிர்கால வர்த்தகத்தினை மீண்டும் முன்னுக்குக் கொண்டு செல்ல நோக்கியா முயற்சி செய்கிறது.
அந்த வகையில், ஒக்டோபர் இறுதியில் தன் விண்டோஸ் மொபைல் போனாக லூமியா 800 என்ற மாடலை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. மீகோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் நோக்கியா என்9 போல இது வடிவமைக்கப் பட்டுள்ளது.
ஆனால் சில மாற்றங்களும் இதில் உள்ளன. என்9, ஆண்ட்ராய்ட் கேலக்ஸி நெக்ஸஸ், ஐ போன் 4எஸ் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில், லூமியா 800 சற்று கூடுதல் வேகம் கொண்ட ப்ராசசரைக் கொண்டுள்ளது.
ஆனால், மற்றவற்றில் சிறிது பின்தங்கியே உள்ளது. ஐபோன் 4எஸ் -3.5 அங்குலம், என்9-3.7 அங்குலம் என்றபடி அமைக்கப்பட்டிருக்கையில், இதன் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே திரை 3.7 அங்குலம் அகலத்தில் உள்ளது.
கேலக்ஸி நெக்ஸஸ் திரை 4.65 அங்குலம் என்பது குறிப்பிடத்தக்கது. திரையின் ரெசல்யூசன் 800 x 480 என்ற படி மற்றவற்றிடமிருந்து குறைவானதாகவே உள்ளது. இதன் தடிமனும் மற்றவற்றைக் காட்டிலும் கூடுதலாக 12.1 மிமீ அளவில் அமைந்துள்ளது.
இதன் மொத்த பரிமாணம் 117 x 61 x 12 மிமீ. இதன் எடை 142 கிராம். லூமியாவின் ப்ராசசர் 1.4 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கக் கூடியது. இதன் ராம் நினைவகம் 512 எம்பி. உள் நினைவகம் விரிவுபடுத்த முடியாத 16ஜிபி அளவிலானது.
மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் இதில் இல்லை. இதன் கமரா 8 எம்பி திறனுடன், கார்ல் ஸெய்ஸ் லென்ஸ் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வீடியோ அழைப்புகளுக்கு முன்புறமாக இதில் கமரா இல்லை. ஆண்ட்ராய்ட் இயக்கம் இல்லாத, ஐ- போன் அல்லாத, புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் மொபைல் போன் தேடுபவர்களுக்கு, நோக்கியாவின் லூமியா 800 ஒரு நல்ல போனாக இருக்கும்.
இதன் விண்டோஸ் மாங்கோ, இதனைப் பயன்படுத்துபவர்களுக்கு அனைத்து வழிகளிலும் புதிய அனுபவத்தினைத் தரும் என்பது உறுதி. பதியப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9, ஸ்கை ட்ரைவில் 25 ஜிபி டேட்டா பதிய அனுமதி எக்ஸ் பாக்ஸ் லைவ் இணைவு, மியூசிக் மற்றும் வீடியோ பிளேயர், 1450 mAh திறன் கொண்ட பேட்டரி ஆகியவை இன்னும் சில சிறப்புகளாகும்.
கருப்பு, சியான் மற்றும் மெஜந்தா வண்ணங்களில் இந்த மாடல் கிடைக்கும். மேலே குறிக்கப்பட்டுள்ள அனைத்து திறன்களிலும் சற்று குறைவாகத்திறன் கொண்டதாக லூமியா 710 என்ற மாடலும் அறிமுகமாகியுள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் இவை அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங்

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் ஆபாச படங்கள் மூலம் புதிய வகை ஹேக்கிங் நடவடிக்கையொன்று வேகமாக பயனாளர்களின் பக்கங்களை தாக்கி வருவதாக முறைப்பாடு எழுந்துள்ளது.
பேஸ்புக்கின் Newsfeeds இன் ஊடாக அனுப்பப்படும் ஜாவா ஸ்கிரிப்ட் செய்தி ஒன்றை கிளிக் செய்வதன் மூலம் தனிநபர் பேஸ்புக் பக்கங்கள் ஹேக் செய்யப்படுகின்றன.
பெங்களூரில் 2 இலட்சம் பேஸ்புக் பாவணையாளர்களது புரொபைல் பக்கம் ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளதாக Mid Day செய்தி தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஹேக்கிங் செய்யப்பட்ட புரொபைல் பக்கங்களிலிருந்து எடுக்கப்படும் புகைப்படங்கள், ஃமார்பிங் மூலம் ஆபாச புகைப்படங்களாக மாற்றப்பட்டு(Pornographic) அவர்களது நண்பர்களது மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்பப்படுகிறது.
இது தொடர்பில் தமக்கு தொடர்ச்சியாக தொலைபேசி முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் தொடர்பான அரச பிரிவு பேஸ்புக் நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளது.
இது ஒரு ஸ்பாம் நடவடிக்கை எனவும், இதனால் ஏற்பட்ட பாதிப்புக்களை கட்டுக்குள் கொண்டு வர கடுமையாக முயன்றுவருவதாகவும், ஸ்பாம் நடவடிக்கைகளிலிருந்து பாவணையாளர்களை காப்பதே எமது முதன்மையான செயற்பாடு எனவும் பேஸ்புக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சில போலியான Malware மற்றும் சில ஜாவா ஸ்கிரிப்டினால் அனுப்பப்படும் செய்திகளை நம்பி ஏமாறும் பயனாளர்கள் தமது உலாவிகளில் அவற்றை பதிவிறக்கம் செய்துவிடுவதன் விளைவாக, இந்த தாக்குதல் உள்ளடக்கம் விரைவாக பகிரப்படுகிறது என பேஸ்புக் தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்த பிரச்சினை இந்தியாவில் மாத்திரமல்லாது சர்வதேச ரீதியில் பேஸ்புக்கிற்கு சிக்கலை கொடுத்துள்ளது. பெருமளவான ஸ்பாம்கள் இந்த ஆபாச படங்கள் ஊடாக பேஸ்புக் பயனாளர்களின் புரொபைல்களை தாக்க தொடங்கியுள்ளன.
இதனை தடுக்க தனது நிர்வாக கட்டமைப்பில் புதிய பாதுகாப்பு விடயங்களை அறிமுகப்படுத்த வேண்டியுள்ளதாகவும் பேஸ்புக் சுட்டிக்காட்டியுள்ளது.
உலகெங்கிலும் இருந்து சுமார் 800 மில்லியன் பயனாளர்கள், பேஸ்புக்கில் பதியப்படும் இந்த ஆபாசபடங்கள் தொடர்பில் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.
இதுவொரு இனந்தெரியாத நபரின் ஹேக்கிங் நடவடிக்கையாக நிச்சயம் இருக்காது எனவும், யார் அந்த சந்தேக நபர் என்பது பேஸ்புக் நிர்வாகத்திற்கும் தெரிந்திருக்கலாம் எனவும் பிபிசி சுட்டிக்காட்டியுள்ளது.
பயனாளர்களது பேஸ்புக் பக்கத்தில் இந்த புதிய ஹேக்கிங் தாக்குதல் நடைபெறாமல் இருப்பதற்காக சில முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் பேஸ்புக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இனந்தெரியாத கோட்களை, பேஸ்புக்கின் Address Bar இல் ஒரு போதும் Copy, Paste செய்யாதீர்கள். எப்போதும் அப்டேட் செய்யப்பட்ட உலாவியை பயன்படுத்துங்கள்.
ஏதும் வித்தியாசமான, அசாதாரண நடவடிக்கைகள் ஏதும் உங்களது பேஸ்புக் பக்கத்திலோ அல்லது நண்பர்களின் பக்கத்திலோ தோன்றினால் உடனடியாக Flag பட்டன் மூலம் பேஸ்புக்கின் Report Links ற்கு தெரியப்படுத்துங்கள்.

உங்களின் Password இதுதானா ? – 25 மிக மோசமான கடவுச்சொற்கள்

மக்கள் பொதுவாகத் தமது இணையத்தளங்களைத் திறப்பதற்காகப் பயன்படுத்தும் மிக மோசமான 25 கடவுச்சொற்களை நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
இவ்வாறான கடவுச்சொற்கள் திருடர்களை மேன்மேலும் பலவீனமாக்கித் இலகுவாக உள்நுழைய வைத்து விடுமென்கின்றனர் நிபுணர்கள்.
இரண்டாவது பொதுவான கடவுச்சொல்லாக 123456 என்பது உள்ளது. இது இணையத் திருடர்களுக்கு ஒரு e-mail இற்குள் அல்லது Facebook இற்குள் நுழைய முயற்சிக்கும்போது மிக இலகுவாக ஊகித்துப் பிடிக்கக்கூடிய கடவுச்சொல்லாகும்.
ஓர் அமெரிக்கக் கடவுச்சொல் பராமரிப்புத் தரவு மென்பொருளான SplashData இனால் உருவாக்கப்பட்ட இந்தப் பட்டியலில் abc123, iloveyou மற்றும் monkey என்பன அடங்குகின்றன.
இணையத் திருடர்களால் நாளாந்தம் ஆயிரக்கணக்கான Facebook கணக்குகள் உடைக்கப்படுகின்றன என்பதை Facebook நிறுவனமும் ஒப்புக்கொண்டுள்ளது.
ஒவ்வொரு 24 மணித்தியாலத்திலும் ஒரு பில்லியனிற்கும் அதிகமான நுழைவுகளில் 600,000 நுழைவுகள் ஏனையவர்களின் செய்திகள், படங்கள் மற்றும் வேறு தனிப்பட்ட Facebook தகவல்களைப் பெற முயல்பவர்களினதாக இருக்கும்.
இந்தக் கணக்கீட்டை முதன்முறையாக வெளியிட்டு நாளாந்தம் எவ்வாறு திருடர்களால் கணக்குகள் களவாடப்படுகின்றன என்பதை Facebook சுட்டிக் காட்டியுள்ளது.
30 வீதமானோர் தமது அனைத்து ஒன்லைன் கணக்குகளிலும் ஒரே கடவுச்சொற்களைப் பயன்படுத்துவதால் இவற்றை உடைத்து உள்நுழைவதும் திருடர்களுக்குச் சுலபமாகிவிடுகின்றது.
இதனால் ஒருவரின் முழு இணையத்தள விபரங்களையும் அவர்களால் பெற்றுவிடக்கூடிய அபாயமும் ஏற்படுகின்றது. எனினும் Facebook தான் இத்திருடர்களின் முதன்மை இலக்காக இருப்பதாகக் கூறப்படுகின்றது.
இணையப் பயனாளர்கள் அனைவரும் தமது ஏனைய கணக்குகளைப் பாதுகாக்க அவற்றைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு இந்நிறுவனம் கேட்டுக்கொள்கின்றது.
இதனால் மோசமான பட்டியலில் உள்ளடங்கும் கடவுச்சொற்களைப் பயன்படுத்துபவர்கள் எவரும் தமது கடவுச்சொற்களை உடனடியாக மாற்றுமாறு இந்நிறுவனம் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றது.
கடவுச்சொற்களைத் தெரிவுசெய்வதற்கான உதவிக்குறிப்புகள்
1. உங்களது கடவுச்சொற்களில் பல்வேறு வகைப்பட்ட அம்சங்களை இணைத்துப் பயன்படுத்துங்கள்.
2. இலக்கங்கள், எழுத்துக்கள் மற்றும் இயலுமாயின் special characters இணைத்துக்கொள்ளுங்கள்.
3. 8 characters இற்கு மேலுள்ள கடவுச்சொற்களைத் தெரிவுசெய்யுங்கள். குறுகிய சொற்களாயின் space அல்லது underscore மூலம் வேறுபடுத்துங்கள்.
4. பல்வேறு இணையத்தளங்களிற்கு ஒரேமாதிரியான கடவுச்சொற்களையும் பயனாளர் பெயரைம் பயன்படுத்தாதீர்கள்.
5. உங்களது பல்வேறு கணக்குகளை நினைவில் வைத்திருக்க ஒன்லைன் கடவுச்சொல் manager இனைப் பயன்படுத்துங்கள்.

மிக மோசமான இணையத்தளக் கடவுச்சொற் பட்டியல்

1. Password

2. 123456

3. 12345678

4. Querty

5. Abc123

6. Monkey

7. 1234567

8. Letmein

9. Trustno1

10. Dragon

11. Baseball

12. 111111

13. Iloveyou

14. Master

15. Sunshine

16. Ashley

17. Bailey

18. Passw0rd

19. Shadow

20. 123123

21. 654321

22. Superman

23. Qazwsx

24. Michael

25. Football

Friday, 18 November 2011

பேஸ்புக் கணக்கை தற்காலிகமாக செயலழிக்க செய்வதற்கு

பேஸ்புக் மிகப்பிரபலமான சமூக இணையதளம். இணையத்தில் அனைவருக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கு பிடித்த சமூக இணையதளம் என்றால் அது பேஸ்புக்காக தான் இருக்கும்.
ஒரு சில நேரத்தில் உங்களுடைய பேஸ்புக் கணக்கை செயலிழக்க செய்ய நீங்கள் நினைக்கலாம் இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது முக்கியமாக உங்கள் கணக்கை யாராவது ஹாக் செய்தாலோ, இந்த தளத்தினால் நேரம் வீணாக செலவாகிறது என நினைக்கலாம்.
ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்கு வைத்திருப்பதால் ஒன்றை செயலிழக்க வைக்க நினைக்கலாம். இப்படி பல காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்.
முதலில் பேஸ்புக் தளத்திற்கு சென்று நீங்கள் செயலிழக்க வைக்க வேண்டிய கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
பிறகு Account Settings பகுதிக்கு செல்லுங்கள்.
Account Settings கொடுத்தவுடன் உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும். அதில் Security என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.
Security லிங்கை கிளிக் செய்தவுடன் வரும் விண்டோவில் கீழே இருக்கும் Deactivate your account என்ற ஒரு லிங்க் இருக்கும். அதை கிளிக் செய்யவும்.
அடுத்து இன்னொரு விண்டோ வரும். அதில் நீங்கள் இந்த கணக்கை Deactivate செய்கிறீர்கள் என்ற சில ஆப்ஷன்கள் காட்டும் அதில் உங்களுக்கானத்தை தேர்வு செய்யவும்.
Email opt out என்ற இடத்தில் டிக் மார்க் கொடுக்கவும்(டிக் பண்ணாமல் விட்டால் பேஸ்புக்கில் இருந்து Invitations,Notifications ஈமெயில்கள் வந்து கொண்டே இருக்கும்)
அடுத்து கீழே உள்ள Confirm பட்டனை அழுத்தவும். அடுத்து இந்த கணக்கின் பாஸ்வேர்ட் கேட்கும். அதை கொடுத்த பின்னர் இன்னொரு Popup விண்டோ வந்து Verfication Code அதையும் சரியாக கொடுத்து Submit பட்டனை அழுத்தினால் உங்களுக்கு ஒரு விண்டோ வரும்.
அவ்வளவு தான் உங்களின் கணக்கு Deactivate செய்யப்படும். உங்கள் Profile யாராவது ஓபன் செய்தால் This Content is Current Unavailable என்ற செய்தி தான் வரும்.
இந்த கணக்கு தற்காலிகமாக தான் பேஸ்புக் தளத்தில் இருந்து நீக்கப்படும். ஆதலால் இந்த கணக்கை நீங்கள் எப்பொழுது நினைத்தாலும் மீண்டும் செயல்படுத்தி கொள்ளலாம்.
எப்பொழுதும் போல இந்த கணக்கின் ID, PASSWORD கொடுத்து நுழைந்தால் தானாகவே Reactivate ஆகிவிடும்.

புகைப்படங்களை அழகான ஆல்பமாக உருவாக்குவதற்கு

புகைப்படங்களை நாம் ஆல்பமாக உருவாக்க போட்டோஷாப்பில் எண்ணற்ற PSD டிசைன் கோப்புகள் உள்ளன.
ஆனால் நமது விருப்பதற்கேற்ப திருமணம், பிறந்தநாள், காலண்டர், அன்னையர் தினம், குழந்தைகள் தினம், காதலர்தினம் என விருப்பத்திற்கேற்ப ஆலபம் தயாரிக்கலாம். 15 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும்.

பின் உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். இதில் கொடுக்கப்பட்டிருக்கும் Scropbook, Greeting Card, Calendor என்பதில் எது உங்களுக்கு தேவையோ அதனை தேர்வு செய்துகொள்ளளலாம்.
Scrapbook ல் உப தலைப்புகளாக Holiday, Birthday, Family, baby, Kids, Wedding என இருக்கும். இதில் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்துகொள்ளலாம்.
தேர்வு செய்யப்பட்ட விண்டோவில் நமக்கு அதிக அளவு டிசைன்கள் இருக்கும். உங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு டிசைனை தேர்வு செய்து அதனை டவுண்லோடு செய்துகொள்ளலாம்.
டிசைனை தேர்வு செய்தபின்னர் நாம் நமது விருப்பபடி நாம் புகைப்படங்களை தேர்வு செய்துகொள்ளலாம்.
புகைப்படங்களை Autofill முறையிலும் தேர்வு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு புத்தகத்திலும் ஐந்து டிசைன்கள் இருக்கும். தேவைப்பட்டால் நாம் டிசைன்களை அதிகப்படியாக சேர்த்துக் கொள்ளலாம்.

Google + என்பது ஒரு சமூக வலைத்தளமல்ல – ஆய்வாளரின் விளக்கம்

Google + என்பது facebook ற்கு போட்டியாக காணப்படுகின்ற சமூக வலைத்தளம் ஆகும். ஆனால் தற்போது இவ் வலைத்தளத்தினை சமூக வலைத்தளமாக கொள்ள முடியாது என google கம்பனியின் தலைமை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது சிலந்தி வலை போன்று பரந்து காணப்படுகின்றமையால் பாவனையாளர்களின் தகவல் தேடலுக்கு உதவுகின்றது.
google என்பது ஏனைய வலைத்தளங்களைவிட வித்தியாசமானதாகவே காணப்படுகின்றது. ஆகவே இது சாதாரண ஏனைய வலைத் தளங்கள் போன்ற சமூக வலைத் தளமாக காணப்படவில்லை என்று தெரிவிக்கின்றனர்.
இத் திட்டமானது google அதிகாரிகளுக்கென உருவாக்கப்பட்டது. சமூகத்தில் காணப்படும் அச்சுறுத்தல்கள் தமது நிறுவன சேவைகள் உற்பத்திகள் பற்றி பாவனையாளர்களுக்கு வழங்குவதற்கென உருவாக்கப்பட்டதே இத் தளமாகும்.
இது ஓர் சிலந்தி வலை போன்று காணப்படுவதால் தமது உற்பத்திகள் பற்றி மட்டுமன்றி அனைத்து நிறுவனங்களினதும் உற்பத்திகளையும் முதன்முறையாக பாவனையாளர்களின் தகவல் தேவைக்காக வழங்கி உள்ளது.
Google profile ஐ பலர் பயன்படுத்துவதற்கும் இதுவே காரணமாகும்.
Google + ஆனது பல நம்ப முடியாத தனித்துவமான தகவல்களை பாவனையாளர்களுக்கு வழங்குகின்றது.
இதன் நோக்கம் அனைத்து வலைத் தளத்திற்கும் சமூக சேவைகளை வழங்குவதன் மூலம் தனக்கென தனித்துவமான ஓர் இடத்தை அமைத்துக் கொள்வதும் google பக்கங்களையே பெரும்பாலான பாவனையாளர்கள் பயன்படுத்த வேண்டுமென்பதும் ஆகும்.
வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையான சௌகரியமான வலைத்தளங்களை google + உருவாக்குகின்றது.
பயன்படுத்த தெரியாதவர்கள் கூட பயன்படுத்த கூடிய வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

பேஸ்புக்கில் அதிகம் ஏமாற்றப்படுபவர்கள் ஆண்களே – ஆய்வில் தகவல்

பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம் விரைவாக மோசடியில் சிக்குபவர்கள் ஆண்களே என்று அண்மையில் நடத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
பெண்கள் இந்த மாதிரியான விஷயங்களில் சிக்கிக்கொள்வது மிகவும் குறைவாகக் காணப்படுகின்றார்கள்.
இதற்கு மோசடியாளர்கள் அதிகமாக பெண்களை பயன்படுத்தியே தமது வலையை விரிக்கின்றனர்.
இதனால் பெண்களை விட ஆண்களே இந்த மாதிரி சில்மிஷங்களில் சிக்கித்தவிக்கின்றனர்.
லண்டன் மற்றும் அமெரிக்காவில் 1,649 பேரிடம் மேற்கொண்ட ஆய்வில் இந்த சுவாரசியமான அறிக்கை வெளிவந்துள்ளது.
ஆண்கள் பெண்களை விட சீக்கிரத்தில் மயங்குவார்கள் கிடைக்கும் எனவும் ஆண்களே இவ்வாறு சிக்கல்களில் மாட்டுவதாக அந்த ஆய்வு கூறுகின்றது.
இவர்களையும் லேசாக சமூக வலைத்தளங்களின் மூலமாக மடக்கி விட முடியும். பேஸ்புக் பயன்படுத்தும் பலருக்கும் இந்த அனுபவம் இருக்கும்.
ஆண்களுக்கு வரும் friend request க்கு ஒருபோதும் மறுப்பு தெரிவிப்பதில்லையாம். ஆனால் பெண்கள் தமக்கு தெரிந்தவர்களை மட்டுமே ADD பண்ணுகிறார்கள். மற்றவர்களை ignore செய்கிறார்கள்.
கண்டபடி எல்லாவற்றையும் ADD பண்ணும் ஆண்களுக்கு தான் ஆப்புகள் அதிகமாக அடிக்கின்றன. இவ்வாறானவர்களுக்கு தங்களது ரகசியங்களை பகிர்வதும் ஆபத்தை அதிகரிக்கின்றன.
இதுபோன்ற சமூகவலைத்தளங்கள் பொழுதுபோக்கை மட்டுமே நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டவை.
இவற்றில் வாழ்க்கையை தொலைத்து பின் தேடுவது முட்டாள்தனமானது. கண்முன்னே பார்ப்பதெல்லாம் கவர்ச்சியாக தோன்றினாலும் உள்ளிருக்கும் ஆபத்து பின்னாளில் தான் தெரியவரும்.

நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!

" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன.  அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,
உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.  சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது.  3 வினாடிகளுக்கு பிறகு  வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித  பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.


இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.

ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு  அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும்   ஸ்தம்பித்துவிடுகின்றன.     
அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும்  கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது.
இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும்.  விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன.   அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த  விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.
இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால்  இந்த கோவில்தான்  இந்துக்களால்  'சனிபகவான்' தலம் என்று போற்றபடுகிறது.  இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை  திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர்.  மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர்.  அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர்.   இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள்
 திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது."

   இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும்.  நாம் பல  செயற்கைகோள்கள்  கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

இதை விஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்வி பட்டேன்.

நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே

நவகிரகங்களை நன்றாக கவனியுங்கள்.  அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!!
உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்!!


எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும், அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்...

எது எப்படியோ??? நமது முன்னோர்கள் நம்மை விட
கில்லாடிகள் !!!!

எப்படியா ??

அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல்
அலைந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல் வளர்ச்சியோடு.

நமக்கு மேலே ஒருவனடா....

ॐ..........சிவமயம்..........ॐ

Wednesday, 9 November 2011

இயற்கையில் கொள்ளை போகும் இதயங்களே! இது உங்களுக்காக (பட இணைப்பு)


பிரித்தானியாவின் இலையுதிர் காலத்தில் ஏற்பட்டுள்ள இயற்கையில் வனப்பான தோற்றப்பாடுகள் உலக மக்கள் அனைவரையும் தன்பால் ஈர்த்துள்ளது.
இது ஒன்றும் அதிசயமான விடயம் இல்லைத்தான். எனினும் இயற்கையின் மாற்றங்கள் அல்லது காலநிலை மாற்றம் என்பது யாராலும் எதிர்வு கூறமுடியாதது.
பிரித்தானியாவின் இலையுதிர் கால தோற்றம் இயற்கைப் பிரியர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளது.
இங்கு நேற்றைய தினம் சூரியன் இளம் சிவப்பு நிறமாக தோற்றமளித்துள்ளது. இதற்கு முன்னர் வெள்ளிக்கிழமை பனிப்புயல் வீசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

நோக்கியா-ஜாவா செல்போன்களில் கோப்புக்களை மென்பொருள் உதவியின்றி மறைக்கலாம்


கைத்தொலைபேசிகளில் வைத்திருக்கும் ரகசிய கோப்புக்களை எந்தவித மென்பொருளின் உதவியின்றி மறைக்கவேண்டுமா.
அதற்கு அந்த கைத்தொலைபேசிகளிலேயே இலகுவான வழி ஒன்று உள்ளது. ஆனால் முக்கிய தேவை, அந்த கைத்தொலைபேசி ஜாவா புரோக்கிராமிற்கு ஒத்துழைக்கக்கூடியதாக இருக்கவேண்டும்.
நோக்கியா,சம்சங், மோட்டோரோலா, எல்.ஜி போன்ற வகை கைத்தொலைபேசிகள் இதற்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடியன. பெரும்பாலும் இப்போது வரும் அனைத்து கைத்தொலைபேசிகளும் ஜாவா உள்ளடக்கப்பட்டே வருகின்றன.
ஆகவே உங்கள் கைத்தொலைபேசியில் ஜாவா உள்ளடக்கப்பட்டிருந்தால் கீழ்கூறியபடி செய்யுங்கள்
முதலில் நீங்கள் மறைக்கவேண்டிய கோப்புக்களை ஒரு போல்டரில் இட்டுக்கொள்ளுங்கள். உதாரணமாக புகைப்படங்களை மறைத்து வைக்கவேண்டுமானால் Images என்ற பெயரில் ஒரு போல்டரினை உருவாக்கி அதனுள் புகைப்படங்களை இட்டு வைக்கலாம்
நீங்கள் உருவாக்கிய போல்டரின் பெயர் .jad என்ற extension இல முடிந்திருக்கவேண்டும். உதாரணமாக Images.jad என்றபடி இருக்கவேண்டும்.
அடுத்ததாக அதே இடத்தில் அதே பெயரிலான (Images) வெற்று போல்டர் ஒன்றினை உருவாக்குங்கள். ஆனால் அதன் extension .jar என்று முடிவடையவேண்டும். உதாரணமாக Images.jar
அவ்வளவும்தான். இப்போது Images.jad என்று பெயரிடப்பட்ட புகைப்படங்களை உள்ளடக்கிய போல்டர் மறைந்துவிடும். அதேவேளை Images.jar என்று பெயரிடப்பட்ட போலி போல்டர் கண்ணுக்கு தெரியக்கூடியதாக இருக்கும்.
இப்போது புகைப்படங்களை கொண்ட போல்டரை எடுக்க வேண்டுமானால் Images.jar என்ற போலி பெயர் கொண்ட போல்டரை நீக்கிவிடுங்கள். புகைப்படங்களை கொண்ட போல்டர் கண்ணுக்கு தெரியக்கூடியதாக இருக்கும்