கைத்தொலைபேசிகளில் வைத்திருக்கும் ரகசிய கோப்புக்களை எந்தவித மென்பொருளின் உதவியின்றி மறைக்கவேண்டுமா.
அதற்கு அந்த கைத்தொலைபேசிகளிலேயே இலகுவான வழி ஒன்று உள்ளது. ஆனால் முக்கிய தேவை, அந்த கைத்தொலைபேசி ஜாவா புரோக்கிராமிற்கு ஒத்துழைக்கக்கூடியதாக இருக்கவேண்டும்.
நோக்கியா,சம்சங், மோட்டோரோலா, எல்.ஜி போன்ற வகை கைத்தொலைபேசிகள் இதற்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடியன. பெரும்பாலும் இப்போது வரும் அனைத்து கைத்தொலைபேசிகளும் ஜாவா உள்ளடக்கப்பட்டே வருகின்றன.
ஆகவே உங்கள் கைத்தொலைபேசியில் ஜாவா உள்ளடக்கப்பட்டிருந்தால் கீழ்கூறியபடி செய்யுங்கள்
முதலில் நீங்கள் மறைக்கவேண்டிய கோப்புக்களை ஒரு போல்டரில் இட்டுக்கொள்ளுங்கள். உதாரணமாக புகைப்படங்களை மறைத்து வைக்கவேண்டுமானால் Images என்ற பெயரில் ஒரு போல்டரினை உருவாக்கி அதனுள் புகைப்படங்களை இட்டு வைக்கலாம்
நீங்கள் உருவாக்கிய போல்டரின் பெயர் .jad என்ற extension இல முடிந்திருக்கவேண்டும். உதாரணமாக Images.jad என்றபடி இருக்கவேண்டும்.
அடுத்ததாக அதே இடத்தில் அதே பெயரிலான (Images) வெற்று போல்டர் ஒன்றினை உருவாக்குங்கள். ஆனால் அதன் extension .jar என்று முடிவடையவேண்டும். உதாரணமாக Images.jar
அவ்வளவும்தான். இப்போது Images.jad என்று பெயரிடப்பட்ட புகைப்படங்களை உள்ளடக்கிய போல்டர் மறைந்துவிடும். அதேவேளை Images.jar என்று பெயரிடப்பட்ட போலி போல்டர் கண்ணுக்கு தெரியக்கூடியதாக இருக்கும்.
இப்போது புகைப்படங்களை கொண்ட போல்டரை எடுக்க வேண்டுமானால் Images.jar என்ற போலி பெயர் கொண்ட போல்டரை நீக்கிவிடுங்கள். புகைப்படங்களை கொண்ட போல்டர் கண்ணுக்கு தெரியக்கூடியதாக இருக்கும்
No comments:
Post a Comment