மக்கள் பொதுவாகத் தமது இணையத்தளங்களைத் திறப்பதற்காகப் பயன்படுத்தும் மிக மோசமான 25 கடவுச்சொற்களை நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
இவ்வாறான கடவுச்சொற்கள் திருடர்களை மேன்மேலும் பலவீனமாக்கித் இலகுவாக உள்நுழைய வைத்து விடுமென்கின்றனர் நிபுணர்கள்.
இரண்டாவது பொதுவான கடவுச்சொல்லாக 123456 என்பது உள்ளது. இது இணையத் திருடர்களுக்கு ஒரு e-mail இற்குள் அல்லது Facebook இற்குள் நுழைய முயற்சிக்கும்போது மிக இலகுவாக ஊகித்துப் பிடிக்கக்கூடிய கடவுச்சொல்லாகும்.
ஓர் அமெரிக்கக் கடவுச்சொல் பராமரிப்புத் தரவு மென்பொருளான SplashData இனால் உருவாக்கப்பட்ட இந்தப் பட்டியலில் abc123, iloveyou மற்றும் monkey என்பன அடங்குகின்றன.
இணையத் திருடர்களால் நாளாந்தம் ஆயிரக்கணக்கான Facebook கணக்குகள் உடைக்கப்படுகின்றன என்பதை Facebook நிறுவனமும் ஒப்புக்கொண்டுள்ளது.
ஒவ்வொரு 24 மணித்தியாலத்திலும் ஒரு பில்லியனிற்கும் அதிகமான நுழைவுகளில் 600,000 நுழைவுகள் ஏனையவர்களின் செய்திகள், படங்கள் மற்றும் வேறு தனிப்பட்ட Facebook தகவல்களைப் பெற முயல்பவர்களினதாக இருக்கும்.
இந்தக் கணக்கீட்டை முதன்முறையாக வெளியிட்டு நாளாந்தம் எவ்வாறு திருடர்களால் கணக்குகள் களவாடப்படுகின்றன என்பதை Facebook சுட்டிக் காட்டியுள்ளது.
30 வீதமானோர் தமது அனைத்து ஒன்லைன் கணக்குகளிலும் ஒரே கடவுச்சொற்களைப் பயன்படுத்துவதால் இவற்றை உடைத்து உள்நுழைவதும் திருடர்களுக்குச் சுலபமாகிவிடுகின்றது.
இதனால் ஒருவரின் முழு இணையத்தள விபரங்களையும் அவர்களால் பெற்றுவிடக்கூடிய அபாயமும் ஏற்படுகின்றது. எனினும் Facebook தான் இத்திருடர்களின் முதன்மை இலக்காக இருப்பதாகக் கூறப்படுகின்றது.
இணையப் பயனாளர்கள் அனைவரும் தமது ஏனைய கணக்குகளைப் பாதுகாக்க அவற்றைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு இந்நிறுவனம் கேட்டுக்கொள்கின்றது.
இதனால் மோசமான பட்டியலில் உள்ளடங்கும் கடவுச்சொற்களைப் பயன்படுத்துபவர்கள் எவரும் தமது கடவுச்சொற்களை உடனடியாக மாற்றுமாறு இந்நிறுவனம் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றது.
கடவுச்சொற்களைத் தெரிவுசெய்வதற்கான உதவிக்குறிப்புகள்
1. உங்களது கடவுச்சொற்களில் பல்வேறு வகைப்பட்ட அம்சங்களை இணைத்துப் பயன்படுத்துங்கள்.
2. இலக்கங்கள், எழுத்துக்கள் மற்றும் இயலுமாயின் special characters இணைத்துக்கொள்ளுங்கள்.
3. 8 characters இற்கு மேலுள்ள கடவுச்சொற்களைத் தெரிவுசெய்யுங்கள். குறுகிய சொற்களாயின் space அல்லது underscore மூலம் வேறுபடுத்துங்கள்.
4. பல்வேறு இணையத்தளங்களிற்கு ஒரேமாதிரியான கடவுச்சொற்களையும் பயனாளர் பெயரைம் பயன்படுத்தாதீர்கள்.
5. உங்களது பல்வேறு கணக்குகளை நினைவில் வைத்திருக்க ஒன்லைன் கடவுச்சொல் manager இனைப் பயன்படுத்துங்கள்.
No comments:
Post a Comment