Google + என்பது facebook ற்கு போட்டியாக காணப்படுகின்ற சமூக வலைத்தளம் ஆகும். ஆனால் தற்போது இவ் வலைத்தளத்தினை சமூக வலைத்தளமாக கொள்ள முடியாது என google கம்பனியின் தலைமை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது சிலந்தி வலை போன்று பரந்து காணப்படுகின்றமையால் பாவனையாளர்களின் தகவல் தேடலுக்கு உதவுகின்றது.
google என்பது ஏனைய வலைத்தளங்களைவிட வித்தியாசமானதாகவே காணப்படுகின்றது. ஆகவே இது சாதாரண ஏனைய வலைத் தளங்கள் போன்ற சமூக வலைத் தளமாக காணப்படவில்லை என்று தெரிவிக்கின்றனர்.
இத் திட்டமானது google அதிகாரிகளுக்கென உருவாக்கப்பட்டது. சமூகத்தில் காணப்படும் அச்சுறுத்தல்கள் தமது நிறுவன சேவைகள் உற்பத்திகள் பற்றி பாவனையாளர்களுக்கு வழங்குவதற்கென உருவாக்கப்பட்டதே இத் தளமாகும்.
இது ஓர் சிலந்தி வலை போன்று காணப்படுவதால் தமது உற்பத்திகள் பற்றி மட்டுமன்றி அனைத்து நிறுவனங்களினதும் உற்பத்திகளையும் முதன்முறையாக பாவனையாளர்களின் தகவல் தேவைக்காக வழங்கி உள்ளது.
Google profile ஐ பலர் பயன்படுத்துவதற்கும் இதுவே காரணமாகும்.
Google + ஆனது பல நம்ப முடியாத தனித்துவமான தகவல்களை பாவனையாளர்களுக்கு வழங்குகின்றது.
இதன் நோக்கம் அனைத்து வலைத் தளத்திற்கும் சமூக சேவைகளை வழங்குவதன் மூலம் தனக்கென தனித்துவமான ஓர் இடத்தை அமைத்துக் கொள்வதும் google பக்கங்களையே பெரும்பாலான பாவனையாளர்கள் பயன்படுத்த வேண்டுமென்பதும் ஆகும்.
வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையான சௌகரியமான வலைத்தளங்களை google + உருவாக்குகின்றது.
பயன்படுத்த தெரியாதவர்கள் கூட பயன்படுத்த கூடிய வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
No comments:
Post a Comment