எம்மில் பெரும்பாலானோர் அடிக்கடி தொலைக்காட்சிகளைத் தான் அதில் வரும் அரசியல்வாதிகளின் அலட்டல்களின்போது திட்டுவோம். ஆனால் இனி அப்படிப் பேசமுடியாது.
இனி நாங்கள் அவதானமாகத்தான் கதைக்கவேண்டும். குறிப்பாக தொலைக்காட்சிகளை நோக்கிக் காட்டும் சைகைகளையிட்டும் கவனமாக இருங்கள்.
iTV என்ற புதிய தொலைக்காட்சியை அப்பிள் கணினி நிறுவனம் உருவாக்குகின்றது. இது உங்களது கத்தல்களை மட்டுமல்லாது உங்களது சைகைகளையும் பார்ப்பது மட்டுமல்லாமல் விளங்கியும் கொள்கின்றது.
ஓர் அமெரிக்க ஆய்வாளரின் கருத்துப்படி அடுத்த வருட இறுதியில் இது பயன்பாட்டிற்கு வரும். இந்தத் தொழினுட்பமே ஏற்கனவே Xbox விளையாட்டுக் கருவியில் இருக்கிறது.
எனினும் இந்தப் புதிய தொலைக்காட்சிக் கட்டுப்படுத்தும் வசதி அப்பிளின் முன்னேற்றம் என்றே கூறலாம்.
இந்தப் புதிய தொலைக்காட்சியில் இணையத்தில் கிடைக்கும் அனைத்துப் படங்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் BskyB போன்ற தொலைக்காட்சி நிறுவனங்களுடன் வலுவான போட்டியையும் உருவாக்கியுள்ளது எனலாம்.
இதன்மூலம் இவர்கள் ‘நான் முற்றுமுழுதாகவே இலகுவாகப் பயன்படுத்தக்கூடிய ஒருங்கிணைக்கப்பட்ட தொலைக்காட்சியொன்றை உருவாக்க விரும்புகின்றேன்’ என்று கூறிச்சென்ற அப்பிளின் முன்னாள் நிறுவுனர் Steve Jobs இன் எதிர்காலக் கனவினை உருவாக்கியதாகக் கூறுகின்றனர்.
இந்தச் சைகைகளை வீடியோக்களைத் திருத்துவதற்கும் தொலைக்காட்சியிலிருந்து ஒரு தொலைபேசிக்குப் படங்களை மாற்றமும் பயன்படுத்த முடியும் என இந்நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment