Friday, 18 November 2011

பேஸ்புக்கில் அதிகம் ஏமாற்றப்படுபவர்கள் ஆண்களே – ஆய்வில் தகவல்

பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம் விரைவாக மோசடியில் சிக்குபவர்கள் ஆண்களே என்று அண்மையில் நடத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
பெண்கள் இந்த மாதிரியான விஷயங்களில் சிக்கிக்கொள்வது மிகவும் குறைவாகக் காணப்படுகின்றார்கள்.
இதற்கு மோசடியாளர்கள் அதிகமாக பெண்களை பயன்படுத்தியே தமது வலையை விரிக்கின்றனர்.
இதனால் பெண்களை விட ஆண்களே இந்த மாதிரி சில்மிஷங்களில் சிக்கித்தவிக்கின்றனர்.
லண்டன் மற்றும் அமெரிக்காவில் 1,649 பேரிடம் மேற்கொண்ட ஆய்வில் இந்த சுவாரசியமான அறிக்கை வெளிவந்துள்ளது.
ஆண்கள் பெண்களை விட சீக்கிரத்தில் மயங்குவார்கள் கிடைக்கும் எனவும் ஆண்களே இவ்வாறு சிக்கல்களில் மாட்டுவதாக அந்த ஆய்வு கூறுகின்றது.
இவர்களையும் லேசாக சமூக வலைத்தளங்களின் மூலமாக மடக்கி விட முடியும். பேஸ்புக் பயன்படுத்தும் பலருக்கும் இந்த அனுபவம் இருக்கும்.
ஆண்களுக்கு வரும் friend request க்கு ஒருபோதும் மறுப்பு தெரிவிப்பதில்லையாம். ஆனால் பெண்கள் தமக்கு தெரிந்தவர்களை மட்டுமே ADD பண்ணுகிறார்கள். மற்றவர்களை ignore செய்கிறார்கள்.
கண்டபடி எல்லாவற்றையும் ADD பண்ணும் ஆண்களுக்கு தான் ஆப்புகள் அதிகமாக அடிக்கின்றன. இவ்வாறானவர்களுக்கு தங்களது ரகசியங்களை பகிர்வதும் ஆபத்தை அதிகரிக்கின்றன.
இதுபோன்ற சமூகவலைத்தளங்கள் பொழுதுபோக்கை மட்டுமே நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டவை.
இவற்றில் வாழ்க்கையை தொலைத்து பின் தேடுவது முட்டாள்தனமானது. கண்முன்னே பார்ப்பதெல்லாம் கவர்ச்சியாக தோன்றினாலும் உள்ளிருக்கும் ஆபத்து பின்னாளில் தான் தெரியவரும்.

நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!

" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன.  அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,
உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.  சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது.  3 வினாடிகளுக்கு பிறகு  வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித  பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.


இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.

ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு  அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும்   ஸ்தம்பித்துவிடுகின்றன.     
அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும்  கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது.
இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும்.  விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன.   அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த  விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.
இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால்  இந்த கோவில்தான்  இந்துக்களால்  'சனிபகவான்' தலம் என்று போற்றபடுகிறது.  இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை  திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர்.  மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர்.  அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர்.   இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள்
 திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது."

   இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும்.  நாம் பல  செயற்கைகோள்கள்  கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

இதை விஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்வி பட்டேன்.

நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே

நவகிரகங்களை நன்றாக கவனியுங்கள்.  அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!!
உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்!!


எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும், அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்...

எது எப்படியோ??? நமது முன்னோர்கள் நம்மை விட
கில்லாடிகள் !!!!

எப்படியா ??

அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல்
அலைந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல் வளர்ச்சியோடு.

நமக்கு மேலே ஒருவனடா....

ॐ..........சிவமயம்..........ॐ

Wednesday, 9 November 2011

இயற்கையில் கொள்ளை போகும் இதயங்களே! இது உங்களுக்காக (பட இணைப்பு)


பிரித்தானியாவின் இலையுதிர் காலத்தில் ஏற்பட்டுள்ள இயற்கையில் வனப்பான தோற்றப்பாடுகள் உலக மக்கள் அனைவரையும் தன்பால் ஈர்த்துள்ளது.
இது ஒன்றும் அதிசயமான விடயம் இல்லைத்தான். எனினும் இயற்கையின் மாற்றங்கள் அல்லது காலநிலை மாற்றம் என்பது யாராலும் எதிர்வு கூறமுடியாதது.
பிரித்தானியாவின் இலையுதிர் கால தோற்றம் இயற்கைப் பிரியர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளது.
இங்கு நேற்றைய தினம் சூரியன் இளம் சிவப்பு நிறமாக தோற்றமளித்துள்ளது. இதற்கு முன்னர் வெள்ளிக்கிழமை பனிப்புயல் வீசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

நோக்கியா-ஜாவா செல்போன்களில் கோப்புக்களை மென்பொருள் உதவியின்றி மறைக்கலாம்


கைத்தொலைபேசிகளில் வைத்திருக்கும் ரகசிய கோப்புக்களை எந்தவித மென்பொருளின் உதவியின்றி மறைக்கவேண்டுமா.
அதற்கு அந்த கைத்தொலைபேசிகளிலேயே இலகுவான வழி ஒன்று உள்ளது. ஆனால் முக்கிய தேவை, அந்த கைத்தொலைபேசி ஜாவா புரோக்கிராமிற்கு ஒத்துழைக்கக்கூடியதாக இருக்கவேண்டும்.
நோக்கியா,சம்சங், மோட்டோரோலா, எல்.ஜி போன்ற வகை கைத்தொலைபேசிகள் இதற்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடியன. பெரும்பாலும் இப்போது வரும் அனைத்து கைத்தொலைபேசிகளும் ஜாவா உள்ளடக்கப்பட்டே வருகின்றன.
ஆகவே உங்கள் கைத்தொலைபேசியில் ஜாவா உள்ளடக்கப்பட்டிருந்தால் கீழ்கூறியபடி செய்யுங்கள்
முதலில் நீங்கள் மறைக்கவேண்டிய கோப்புக்களை ஒரு போல்டரில் இட்டுக்கொள்ளுங்கள். உதாரணமாக புகைப்படங்களை மறைத்து வைக்கவேண்டுமானால் Images என்ற பெயரில் ஒரு போல்டரினை உருவாக்கி அதனுள் புகைப்படங்களை இட்டு வைக்கலாம்
நீங்கள் உருவாக்கிய போல்டரின் பெயர் .jad என்ற extension இல முடிந்திருக்கவேண்டும். உதாரணமாக Images.jad என்றபடி இருக்கவேண்டும்.
அடுத்ததாக அதே இடத்தில் அதே பெயரிலான (Images) வெற்று போல்டர் ஒன்றினை உருவாக்குங்கள். ஆனால் அதன் extension .jar என்று முடிவடையவேண்டும். உதாரணமாக Images.jar
அவ்வளவும்தான். இப்போது Images.jad என்று பெயரிடப்பட்ட புகைப்படங்களை உள்ளடக்கிய போல்டர் மறைந்துவிடும். அதேவேளை Images.jar என்று பெயரிடப்பட்ட போலி போல்டர் கண்ணுக்கு தெரியக்கூடியதாக இருக்கும்.
இப்போது புகைப்படங்களை கொண்ட போல்டரை எடுக்க வேண்டுமானால் Images.jar என்ற போலி பெயர் கொண்ட போல்டரை நீக்கிவிடுங்கள். புகைப்படங்களை கொண்ட போல்டர் கண்ணுக்கு தெரியக்கூடியதாக இருக்கும்

கணினிக்கு தேவையான அடிப்படை மென்பொருட்கள் இலவசமாக ஒரே இடத்தில்


ஒரு கணினி கொண்டிருக்கவேண்டிய அடிப்படையான மென்பொருகளை ஒரு தளம் பட்டியல் படுத்தி தருகிறது.
இங்கு 90 இற்கும் மேற்பட்ட பயன்மிகு, இலவச மென்பொருட்கள் வகை வகையாக பிரிக்கப்பட்டு உள்ளன. அதாவது WebBrowsers,  Messanging, Media என பல வகைகளில் பிரிக்கப்பட்டுள்ளது.
இவற்றை தரவிறக்குவதும் இலகு.
இந்த தளத்துக்கு சென்று உங்களுக்கு வேண்டிய மென்பொருட்களை தெரிவ்செய்துவிட்டு Get Installer என்பதை கொடுத்தால் முதலில் அதற்கான தரவிறக்கி உங்கள் கணினியி சேமிக்கப்படும்.
அதன் பின்னர் அந்த தரவிறக்கியை திறந்தால் நாம் ஏற்கனவே தெரிவிசெய்த மென்பொருட்கள் தரவிறங்க ஆரம்பிக்கும்.
இந்த தளம் செல்ல : Ninite 


பேஸ்புக்கில் புதிய வைரஸ் – அவதானம்


நாளுக்கு நாள் பேஸ்புக்கில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்த வண்ணமே உள்ளன. அதற்கேற்றாற்போல் சட்டவிரோதமாக அடுத்தவர் கணக்கினுள் புகுந்து தகவல்களை திருடும் வேலைகளும் முன்னரை விட இப்போது அதிகரித்துள்ளன.
இப்போது புதுவிதமாக கருத்தைக் கவரும் செய்திகளுடன் பல இணைப்புக்கள் வருகின்றன. இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்தால் உங்கள் தகவல்கள் திருடப்பட்டு உங்கள் கணக்கு முடக்கப்படும் அபாயம் உள்ளது.
ஆரம்பத்திலேயே இவ்வாறான Spam இணைப்புக்கள் வந்தபோதும், தற்போது பேஸ்புக் தனது பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கிய பின்பு ஓரளவு குறைந்திருந்தன.
மறுபடியும் இப்போது முன்னரைப்போல இந்த Spam இணைப்புகள் எல்லோர் கணக்கிற்கும் வரத்தொடங்கியுள்ளன. அந்த வகையில் இப்போது புதிதாக வந்திருக்கிறது ஓர் Spam இணைப்பு.
“SICK I Just Hate Rihana after Watshing this video” என்ற ஓர் செய்தியுடன் ஓர் இணைப்பு எல்லோர் கணக்கிற்கும் வருகிறது.
ஆபாச இணைப்பு போல் தோன்றும் இந்த இணைப்பை கிளிக் செய்தால் ஒரு பக்கத்திற்கு (Fan Page) செல்கிறது. நீங்கள் அந்த பக்கத்தை Like பண்ணினால்தான் அந்த வீடியோவை பார்க்கமுடியும் என்று சொல்கிறது.  ஆனால் நீங்கள் Like பண்ணினால் அங்கே எந்த வீடியோ இணைப்பும் காணப்படமாட்டாது.
மாறாக உங்கள் கணக்கு தொடர்பான தகவல்கள் முழுவதும் திரட்டப்படுகிறது. சிலவேளைகளில் உங்கள் கணக்கு முடக்கப்படும் அபாயங்களும் உள்ளன.
அத்துடன் நீங்கள் இந்த இணைப்பை கிளிக் செய்தவுடன் உங்கள் நண்பர்களின் Wall இல் உங்கள் பெயருடன் பதியப்படுகின்றன. உங்கள் நண்பர்களும் நீங்கள்தான் பகிர்ந்துகொண்டதாக கருதி அந்த இணைப்பை கிளிக் செய்வார்கள்.  அதனால் அவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
ஆகவே இவ்வாறான இணைப்புக்கள் வரும்போது அது பற்றி பேஸ்புக் குழுமத்திற்கு Report செய்துவிட்டு அந்த இணைப்புக்களை நீக்கிவிடுவது நல்லது

Saturday, 5 November 2011

பேஸ்புக்கில் நாம் கூறும் கருத்துக்களை பதிவு செய்கிறது கூகிள்


பேஸ்புக் பாவனையாளர்கள் தெரிவிக்கும் தகவல்களை அட்டவணைப்படுத்தும் புதிய தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தி இருப்பதாக கூகிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இத்தொழில்நுட்பம் இணையதள வலைப்பின்னலின் எல்லா பகுதிகளுக்கும் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும் எனத் தெரிவிக்கிறது.
ஆனால் இவ்வாறு பாவனையாளர்கள் வழங்கியுள்ள தகவல்களை கூகிள் அட்டவணைப்படுத்துவதன் காரணமாக பேஸ்புக் பாவனையாளர் தயக்கமடைந்துள்ளனர்.
தங்களுடைய செய்திகளை பிறர் அறிந்து கொள்வார்கள் என்ற அச்சம் பாவனையாளர்களின் மத்தியில் நிலவுவதாக நிறுவனம் தெரிவிக்கிறது.
பேஸ்புக்கிள் வழங்கப்பட்ட கருத்துக்களை கூக்கிள் இஸ்பைடர் அவற்றினை பதிவு செய்து நிரைப்படுத்தும்.
யாராவது ஒருவர் ஏதாவது கருத்தைச் சொன்னால் தேவைப்பட்டும் போது அதனை மீளவும் பார்க்கமுடியும். வேறொருவர் தம்மைப்பற்றி கூறியவற்றையும் அட்டவணையில் இருந்து அறிந்து கொள்ள முடியும் என கூறப்படுகிறது.

இன்று நவம்பர் 5, பேஸ்புக்கை ஹெக் செய்வதாக சவால் விடுக்கப்பட்ட தினம்: முடியுமா அவர்களால்?



இன்று நவம்பர் மாதம் 5 ஆம் திகதி பேஸ்புக் சமூக வலையமைப்பினை ஹெக்கிங் செய்து நிறுத்துவதாக சவால் விடுத்திருந்தது 'Anonymous' என்ற பிரபலமான ஹெக்கர்களின் குழு.இது தொடர்பான செய்தியை அக்குழு வெளியிட்ட காணொளியுடன் நாம் உங்களுக்கு வழங்கியிருந்தோம். 

எனினும் இன்றும் அதாவது இச்செய்தி எழுதப்படும் வரை பேஸ்புக் வலையமைப்பு சிறப்பாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. 

' ஒபரேஷன் பேஸ்புக்' என அத்திட்டம் பெயரிடப்பட்டுள்ளதாக அக்குழு அறிவித்திருந்தது. 

இச்செய்தியை நாம் எளிதில் புறக்கணித்து விடாத காரணம் அக்குழுவின் சில நடவடிக்கைகளாகும். 

கடந்த சில காலங்களாக பல முக்கிய நிறுவனங்களின் குறிப்பாக மாஸ்டர் கார்ட், பேபேல் மற்றும் அமெசொன் ஆகியவற்றின் இணையக்கட்டமைப்புகளை ஹெக்கிங் செய்திருந்தது. 

ஆனாலும் அக்குழுவால் பேஸ்புக்கினை வீழ்த்த முடியாமல் போனதா? அல்லது அத்திட்டத்தினைக் கைவிட்டுவிட்டதா? 

இது தொடர்பில் அக்குழு தகவல் எதனையும் இதுவரை வெளியிடவில்லை. 

எனினும் இன்றைய தினம் முடிவதற்கு இன்னும் பல மணித்தியாலங்கள் உள்ளன. 

எனவே பொறுத்திருந்து பார்ப்போம்!

Wednesday, 2 November 2011

காயங்கள்


எல்லோரின் இதயத்திலும் 
காயங்கள் உண்டு 

அதை வெளிப்படுத்தும் 
விதம்தான் வித்தியாசம் 

உரிமை உள்ளவர்களிடம் 
கண்ணீராக... 

மற்றவர்களிடம் 
புன்னகையாக...

மாற்றத்தை விரும்பும் இந்த மானிட உலகில் ..

எதுவுமே நிரந்திரமற்ற 
இந்த மானிட வாழ்வில் , 
நாம் விரும்புவர் மட்டும் 
எப்படி நிரந்திரமாவர் ?? 
நம்மை விரும்புவர் மத்தியில் 
நம் பேர் நிலைக்கும் 
என நாம் கனவு ஒன்று 
கண்டாலும் அது எப்படி நிறைவேறும் ?? 
மாற்றத்தை விரும்பும் இந்த 
மானிட உலகில் ..

Monday, 31 October 2011

உலகம் முழுவதும் பேசப்படும் 17 வயது தமிழ்ச் சிறுவன்: கான்சரை குணப்படுத்துவானா ?காணொளி(வீடியோ இணைப்பு)

கனடாவில் வசிக்கும் வெறும் 17 வயதாகும் தமிழ் சிறுவன் ஒருவன் இன்று உலகளாவிய ரீதியில் பேசப்பட்டு வருகிறார். அபிக்குமரன் அன்று அழைக்கப்படும் இச் சிறுவன் 17 வயதில் டாக்டர் பட்டத்தைப் பெற்றது மட்டுமல்லாது கான்சரை குணப்படுத்த ஒரு பொறிமுறையைக் கண்டறிந்துள்ளார்
அதனை அவர் கனடாவில் உள்ள கான்சர் பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பிவைக்க அங்கே பணி புரியும் மூத்த ஆராட்சியாளர் ஒருவர் தலையில் கைவைக்கும் அளவு அந்தப் பொறிமுறை அமைந்திருந்தது. சொல்லிப் புரியவைக்க முடியாத அந்தப் பொறிமுறையை விரிவாகப் பார்த்தால் அதன் மூலம் கான்சர் செல்களை அழித்து அந் நோயை முற்றாக குணப்படுத்த அது ஏதுவாக அமையும் என்பதனை அறிந்த மூத்த ஆய்வாளர் அபிக்குமரனை அழைத்து தனது ஆய்வகத்தில் வேலைசெய்ய அனுமதித்துள்ளார்.
இன்று கனடா முழுவதும் பேசப்படும் 17 வயது நிரம்பிய தமிழர் யார் என்று கேட்டால் இந்த அபிக்குமரன் தான். அவர் வளர்ந்துவரும் நிலையில் இன்னும் சில காலத்தில் அவர் உருவாக்கியுள்ள பொறிமுறையைக் கையாண்டால் கான்சரை முற்றாக அழிக்க முடியும் என மூத்த ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கான்சர் என்னும் உயிர் கொல்லி நோயை அழிக்கப் பிறந்த ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக அபிக்குமரன் உள்ளார் என அவரை பாராட்டி புகழ்ந்து தள்ளியுள்ளனர் பல மூத்த ஆய்வாளர்கள். அச் சிறுவனிடம் புதைந்து கிடக்கும் அறிவும் ஆற்றலும் தம்மை பிரமிக்கவைப்பதாகவும் 30 ஆண்டுகளாக தாம் செய்திராத ஆராட்சிகளை அச் சிறுவன் வித்தியாசமாகவும் வேறு கோணத்திலும் சிந்தித்துச் செய்வதாக அவர்கள் கூறியுள்ளனர்.

காணொளி(வீடியோ இணைப்பு)




தமிழன் என்ற பெருமை எமக்கும் உண்டு

வீரம் வீரம் என்று சொல்லி என்ன செய்தோம்… கடைசியாக எல்லோரும் செத்தது தானே மிச்சம் ---->

வீரத்துக்கும் துரோகத்துக்கும் வித்தியாசம் இருக்கு… ஒரு நாட்டோடு ஒன்பது நாடுகள் மோதுவது வீரமல்ல, துரோகம் !

இன்னும் என்ன தோழா?
நம்மை இங்கே நாமே தொலைத்தோமே??
நம்ப முடியாதா?நம்மால் முடியாதா?
நாளை வெல்லும் நாளாய் செய்வோமே..
யாரும் இல்லை தடைபோட.. 
வந்தால் அலையாய் வருவோம்..
வீழ்ந்தால் விதையாய் வீழ்வோம்
!http://www.facebook.com/photo.php?v=265806833454431

Saturday, 6 August 2011

ஓர் நாள் உன்னை காணாவிடில் எங்கே உன் அன்பென்று கேட்கின்றன


உன்னை தென்றல் தீண்டவும் விட மாட்டேன்அந்த திங்கள் தீண்டவும் விடமாட்டேன்உன்னை வேறு கைகளில் தர மாட்டேன்நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன்ஓர் நாள் உன்னை காணாவிடில் எங்கே உன் அன்பென்று கேட்கின்றனநீ வந்தால் மறுகணம் விடியும் என் வானமே

Friday, 5 August 2011

கைய புடி கண்ண பாரு ....................

http://www.facebook.com/video/video.php?v=203582623002625&comments

வாழ்க்கை என்னும் கடலிலே ..

கடல் போன்ற வாழ்க்கையிலே...... 
கரை தேடும் அலைகளை போல்.....
எம் வாழ்வு நித்தமும் கொந்தளிப்பாய்....!!

Thursday, 4 August 2011

தவழ்ந்து விழுந்து எழுந்து




தவழ்ந்து விழுந்து எழுந்து.......




தவழ்ந்து விழுந்து எழுந்து தடுமாறி மறு படியும் 
 நடந்து பழகினால் மட்டுமே நேராய் நிதானமாய்  
நடந்திட முடியும் மானிடராய் பிறந்து விட்டால்
இது போல் தான் அவனின் ஒவ்வொரு செயல்களும்  

Wednesday, 3 August 2011

இது என்ன தெரியுமா ?

லண்டனில்  தமிழ் சாப்பாட்டு கடை  ஒன்றில் சாப்பிட தயாரான நிலையில்  பொரித்த கோழி ஒன்றை இவ்வாறு  அலங்கார படுத்தி வைத்துள்ளனர் . இது ஒரு தமிழரின் கை வண்ணம் . தேசிக்காய் , மிளகாய் போன்றவற்றை கொண்டு தலை பகுதி  அலங்காரம்  செயபட்டுள்ளது .

Tuesday, 2 August 2011

மனமே ஒ மனமே மாறி விடு ....

மனமே! ஏன் மாறினாய்!

மனமே! மனமே! ஏன் மாறினாய்!  என்னை கேட்காமல் 
இதுவரை நான் உன்னை வெல்வேன். என எண்ணியிருந்தேன். 
நீ என்னை வெல்வாய் என ஒருபோதும்  எண்ணியதில்லை.
 என்னுள் இருந்து என்னை வென்று விட்டாய் நீ.
 இனி உன்னை தோற்கடிக்க முடியுமா ? என்னால் 
  நான் செய்யவேண்டியது  என்ன  சொல் மனமே ! !!!!!

Monday, 1 August 2011

என்னமோ எதோ .................

ஏதோ ஏதோ சொல்ல வந்தேன் -ஆனாலும்
வார்த்தைகளை கூற என் உதடு மறுத்தது...♥
மங்கள ஓசைகள் கேட்டன காதில்
மங்கை அவள் வருகை தெரிந்தது மனதில்
வந்த அவள்- பார்த்தது பார்வை
மார்பினுள் ஏதோ அடித்தது ஓசை!..♥♥